
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், மற்றவர்களை பார்த்தாவது தனது தவறை வேகமாக திருத்திக்கொள்ள முன்வர வேண்டும் என்று முன்னாள் தென் ஆப்ரிக்க ஆல் ரவுண்டர் லேன்ஸ் குலூஸ்னர் கூறியுள்ளார். ரிஷப் பண்ட் முன்னாள் கேப்டன் தோனியின் இடத்தை பூர்த்தி செய்ய, இந்திய தேர்வுக்குழுவினர் இவர் தயார் செய்து வரும் நிலையில், சமீபத்தில் முடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில், தோனியின் சாதனையை உடைத்தார்.
இதற்கிடையில், பண்ட் திறமையான வீரர் என்ற போதும், ஒருநாள் (22.90 சராசரி), டி-20 (21.57 சராசரி) போட்டிகளில் தவறான ‘ஷாட்’ ஐ தேர்ந்தெடுத்து மோசமான சராசரி வைத்துள்ளார். இந்நிலையில் இது ஒருபோதும் பண்டிற்கு கைகொடுக்காது என முன்னாள் தென் ஆப்ரிக்க ‘ஆல் ரவுண்டர்’ லேன்ஸ் குலூஸ்னர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து குலூஸ்னர் கூறுகையில், ‘பண்ட போல திறமையான வீரர்கள் தவறில் இருந்து மற்றவர்களைப்பார்த்தாவது விரைவாக கற்றுக்கொள்ள வேண்டும். நாம் செய்யும் தவறில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள நீண்டநாட்களாகும்.
ஆனால் அதேசமயம் மற்றவர்கள் செய்யும் தவறில் இருந்து கற்றுக்கொள்ளும் போது, விரைவாக நம் தவறை மேம்படுத்திக்கொள்ள முடியும். தோனி இருக்கும் போதே இந்திய அணிக்கு பண்ட் போன்ற திறமையான வீரர் கிடைத்துள்ளது மிகச்சிறந்த விஷயம்.’ என்றார்.