கேப்டன் பொறுப்பிலிருந்து அகமது நீக்கம்

பாகிஸ்தான் அணியின் டெஸ்ட் மற்றும் டி 20 தொடர்களுனான கேப்டன் பொறுப்பிலிருந்து சர்ஃபராஸ் அகமது நீக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் தகுதி சுற்றோடு வெளியேறியதை அடுத்து சர்ஃபராஸ் அகமது மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்தது.

விளம்பரம்

அதன் பிறகும் கூட இவரது ஆட்டத்திறன் சொதப்பிய நிலையில் இருக்கவே இந்த முடிவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எடுத்துள்ளது. இவருக்கு பதிலாக டெஸ்ட் போட்டி கேப்டனாக அசார் அலி மற்றும் டி 20 போட்டி கேப்டனாக பாபர் அசாம் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சர்ஃபராஸ் அகமது கேப்டனாக பொறுப்பேற்று விளையாடி 37 போட்டிகளில் 29ல் பாகிஸ்தான் அணி வெற்றிகளை கண்டுள்ளது.

விளம்பரம்
கேப்டன் பொறுப்பிலிருந்து அகமது நீக்கம் 1

இது குறித்து கருத்து தெரிவித்திட்டுள்ளார் சர்ஃபராஸ் அகமது, “பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இருந்ததை விட மிக பெரிய கவுரவம் வேறு ஏதுமில்லை. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் என் மீது விழுந்த விமர்சனங்களை உடைத்தெறிய காத்திருக்கிறேன்” என்றார்.

தொடர்புடையவை  அனைத்து நிலைகளிலும் சிதறிவிட்டோம்: கோலி

தற்போது நியமிக்கப்பட்டுள்ள அசார் அலி 73 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5669 ரங்களை குவித்ததுள்ளார். அதே போல பாபர் அசாம் டி20 தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். மேலும் 2012ஆம் ஆண்டு நடைபெற்ற 19வயதுக்கானோர் உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணியின் கேப்டனான பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

தற்போது 7வது நிலையில் இருக்கும் பாகிஸ்தான் அடுத்த மாதம் 5ஆம் நிலையில் உள்ள ஆஸ்திரேலியா அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. அதே போல இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகளுடனும் விளையாட உள்ளது.

விளம்பரம்

Leave a Comment