தனியார் கல்லூரியில் நடந்த விழாவில் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி தன் நடிப்பில் உருவாகியுள்ள “வீட்ல வீக்ஷசங்க” படத்துடைய அறிமுக விழாவில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் பல விஷயங்கள் குறித்தும் பேசினார்.
முக்கியமாக “பல ஆண்களுக்கு பெண்களிடம் பேசவே தெரிவதில்லை, அதனால் தான் பெரிய பிரெச்சனைகள், ஆனால் ஒவ்வொரு முறையும் நான் இந்த கல்லூரி வரும் பொது பார்த்து சந்தோசப்படும் விஷயம் இங்கு ஆண்களும் பெண்களும் ஒரே பெஞ்சில் அமர்ந்திருப்பது தான். உண்மையில் அது ஒரு நல்ல விஷயம், அதனால் பெண்களுக்கும் ஆண்களுக்கும் இருக்கும் தூரம் குறைகிறது”

“அதே போல, படங்களில் பெண்கள் வேலைக்கு போனால் கெட்டவள், வீட்டில் இருப்பவள் கெட்டவள், மன்னன் படத்தில வீட்ல இருக்குற குஷ்பு நல்ல பெண்ணாகவும், கம்பெனி’யா பத்துக்குற விஜயசாந்தி கெட்டவளாகவும் கட்டிருப்பாங்க, படையப்பா படத்துல வீட்ல வேலை செய்யுற சௌந்தர்யா நல்லவ, வெளிநாடு போய் படிச்சிட்டு வந்த ரம்யாகிருஷ்ணன் கேட்டவ என ரொம்ப தப்பா கட்டிருப்பாங்க” எனவும் கூறுவார்.
மேலும் “குடிக்குறது தப்புன்னா யாருமே குடிக்க கூடாது, அது என பொண்ணுங்க மட்டும் குடிக்க கூடாது” என பல் விஷயங்கள் பற்றி பேசியுள்ளார். ஒரு நாளேடு, ‘ரஜினி படங்களை தாக்கும் ஆர்.ஜே.பாலாஜி” என தலைப்பிட்டு இருந்தது.
இப்பொது நடிகர் ஆர்.ஜே.பாலாஜி அதனை தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டு, “நான் பேசிய அவ்ளோ விஷயங்களில் இது மட்டும் தான் உங்களுக்கு கெடைச்சுதா, லாரி டமால் – டிரைவர் பணால்” என கலாய்த்து பதிவிட்டுள்ளார்.