வருகிற ஆகஸ்டில் தமிழக காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார் – தற்போதைய மாநில கட்சி தலைவர் திரு. கே.எஸ் .அழகிரி

இன்னும் நாடாளுமன்ற தேர்தலுக்கு கிட்டத்தட்ட 1 ஆண்டே உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி தன்னுடைய பலத்தை மேம்படுத்த அனைத்து மாநிலங்களிலும் முயற்சித்து வருகிறது. இரண்டு முறை மத்தியில் ஆட்சியை இழந்துள்ள அந்த கட்சி, பல மாநிலங்களிலும் தங்களுடைய ஆட்சியை மத்திய பா.ஜ.கவிடம் இழந்துள்ளது. இதனால் வருகிற தேர்தலில் முழு வீச்சில் இறங்கி வேலை செய்ய முனைப்புக்குகளை செய்து வருகிறது.

அதன் ஒரு பங்காக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தனது நிறுவனத் தேர்தலை ஜூன் மாதம் நடத்தி, ஆகஸ்ட் மாதம் அதன் புதிய தலைவரை அறிவிக்கும். டிஎன்சிசி மாநில தலைவர் கே.எஸ். அழகிரி வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், புதிய பெண் தலைவரைக் கண்டறிய கட்சி முயற்சித்து வருவதாகக் கூறினார்.

விளம்பரம்

வருகிற ஆகஸ்டில் தமிழக காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார் - தற்போதைய மாநில கட்சி தலைவர் திரு. கே.எஸ் .அழகிரி 1

கட்சியின் பூத் நிலை மற்றும் தொகுதி அளவிலான நிர்வாகிகளுக்கான தேர்தல் நடத்தப்படும். ஜூன் 10ஆம் தேதி முதல் மாத இறுதி வரை நடைபெறும் கட்சி அமைப்புத் தேர்தலை நடத்த மொத்தம் 600 தேர்தல் அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

விளம்பரம்
தொடர்புடையவை  நெருங்குகிறது உள்ளாட்சி தேர்தல்! ஓட்டுச்சீட்டுகளின் வண்ணங்கள், ஓட்டுப்பதிவு நேரம் அறிவிப்பு!!

15 லட்சம் தொண்டர்கள் அமைப்புத் தேர்தல்களில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர், மேலும் இந்த அமைப்புத் தேர்தல்கள் 2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு அடித்தளமாக இருக்கும் என்று கூறினார்.

தமிழகத்தில் திமுகவுடன் அரசியல் கூட்டணியில் உள்ள காங்கிரஸ், 234 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் 18 எம்எல்ஏக்களையும், மாநிலத்திலிருந்து மக்களவையில் 8 எம்பிக்களையும் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment