வீரியம் மிக்க வலி நிவாரணிகளால் குழந்தைகளுக்கு ஆபத்து..!

வெளியிட்டது
வீரியம் மிக்க வலி நிவாரணிகளால் குழந்தைகளுக்கு ஆபத்து..! 1

கேடு விளைவிக்கின்ற வலி நிவாரணிகளால் குழந்தைகள் பெருமளவில் பாதிக்கப்படுவதாகவும் ஆதலால் அவர்கள் அவசர கால மருத்துவமனையில் அதிக அளவில் சேர்க்கப்படுவதாகவும் அமெரிக்கா ஆய்வில் தெரிவித்துள்ளது.

வலி நிவாரணிகளை தேவையில்லாமல் உட்கொள்ளுதல், சுய தீங்கு விளைவித்துக் கொள்ளுதல் போன்ற செய்கையால் சுமார இரண்டு லட்ச அமெரிக்க குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மேலும் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஆய்வு கூறுகிறது. கடந்த 2005 முதல் எடுக்கப்பட்ட கணக்கில் இச்சம்பவம் குறைந்துவிட்டாலும் அதனை தேவையின்றி உட்கொள்ளுதலால் ஏற்படும் விளைவுகளின் அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக கிளினிகல் டெக்னாலஜி என்னும் இதழில் கூறப்பட்டுள்ளது.

கேடு விளைவிக்கக்கூடிய அதிக வீரியம் கொண்ட வலி நிவாரணிகளில் தொற்றுநோய் (கேன்சர்) விளைவிக்கக்கூடிய ஓப்பியாய்டு என்னும் போதைப் பொருள் கொண்டு செய்யப்படுகிறது. ஆதலால் இதனை உட்கொண்ட குழந்தைதளுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. 2005 முதல் 2018ம் ஆண்டு வரை 2,07,543 வழக்குகள் 55 அமெரிக்க விஷக் கட்டுப்பாட்டு மையங்களில் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. ஆதலால் பாதிப்புக்குள்ளாகி இருப்பவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் குழந்தை மருத்துவர்கள் இந்த நெருக்கடியைத் தணிக்க பயனுள்ள கொள்கை மாற்றங்களுக்கு முயற்சிக்க வேண்டும் என்று ஆய்வில் வலியுறுத்தி உள்ளன.

சுபாஷினி

As someone who's watched the industry evolve over the years, I'm committed to bringing you the most authentic, insightful, and entertaining coverage of Tamil cinema, one story at a time. மகத்தான சாதனை புரிந்தவர்கள் யாவருமே, தோல்வி பல கடந்து வென்றவர்களே

வெளியிட்டது

புதிய செய்திகள்