சமீப காலமாக நம் டிவியிலும் சரி, சமூக வலைத்தளங்களிலும் சரி, அடிக்கடி கேட்டு கொண்டு வரும் பெயர்தான் வனிதா. நடிகர் விஜயகுமார் மற்றும் நடிகை மஞ்சுளா இந்த தம்பதியின் மூத்த மகளான இவர் சர்ச்சைக்கு பெயர் போனவர். மூன்று திருமணம் முடிந்த நிலையில் யாருடனும் வாழ பிடிக்காமல் தனியாக வாழ்ந்து வருகிறார். இவருக்கு ஹரி என்ற ஒரு மகனும் இரு மகள்களும் உள்ளனர். மகன் ஹரி விஜய்குமாருடன் வாழ்ந்து வரும் நிலையில் வனிதா தனது இரு மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார்.

இந்த நிலையில் அவர் பிக்பாஸ் சீசன் 3 என்ற நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டார். அங்கு ஆரம்பம் முதலே சண்டை பிரச்சனை என பிக்பாஸ் வீட்டையே கலவரமாக வைத்து இருந்தார். காதல் செய்தால் தனக்கு பிடிக்காது என்று கவின் லாஸ்லியா ஆகியோரிடமும், ஷெரின் தர்சன் ஆகியோரிடமும் சண்டை செய்து வந்தார். மேலும் அபிராமி முகேன் நட்பையும் பிரித்து சண்டை மூட்டி வந்தார். கோபமடைந்த மக்கள் ஒரு கட்டத்தில் வெளியேற்றி விட மீண்டும் wild card என்ட்ரி என அவரை உள்ளே கொண்டு வந்தனர். அனால் அவரது செயல்கள் பிடிக்காமல் மீண்டும் மக்கள் அவரை வெளியேற்றினர்.

தற்போது பிக்பாஸ் அல்டிமேட் என்ற 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். நிகழ்ச்சி ஆரம்பித்து 3 வாரங்களை கடந்த நிலையில் இன்று அவர் தாமாக முன் வந்து வெளியேறி இருக்கிறார். மன அழுத்தம் காரணமாக இரண்டு நாட்களுக்கு முன்பு பிக்பாஸ்ஸிடம் சென்று அழுத வனிதா இன்று வெளியேறிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறன்றன. நேற்று கமல் வெளியேறிய நிலையில் இன்று வனிதாவும் வெளியேறி இருப்பது பிக்பாஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்து உள்ளது. Watch the below video..