கடந்த ஒரு வாரமாக சோசியல் மீடியாவில் படு வைரலாக போய்க் கொண்டிருக்கும் ஒரு செய்தி தான் தயாரிப்பாளர் ரவீந்திரன் மற்றும் சின்னத்திரை நடிகை மகாலட்சுமியின் திருமணம். தயாரிப்பாளர் ரவீந்திரன் லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ் என்னும் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் மூலமாக அவர் நட்புனா என்னனு தெரியுமா? முருங்கைக்காய் சிப்ஸ், கல்யாணராமன், நளனும் நந்தினியும் போன்ற சில படங்களை தயாரித்து இருக்கிறார். இவர் கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி திருப்பதியில் வைத்து சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு யாரையும் அவர் அழைக்கவில்லை. சினிமா துறையைச் சேர்ந்த யாரும் திருமணத்தில் கலந்து கொள்ளாமல், வெறும் குடும்பத்தினரை மட்டுமே வைத்து எளிய முறையில் திருமணத்தை நடத்தினார் ரவீந்திரன். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

திருமணம் முடிந்த கையோடு இவர்கள் பல பேட்டிகளை கொடுத்து வருகின்றனர். youtube தொலைக்காட்சிகள், மீடியா என்று பல சேனல்களுக்கு இவர்கள் இருவரும் பேட்டி அளித்து வருகின்றனர். சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை பொருத்தவரை இவருக்கு திருமணம் ஆகி, விவாகரத்தானவர். இவருக்கு மகன் ஒருவரும் இருக்கிறார். அதேபோல ரவீந்திரனுக்கும் திருமணமாகி மூன்று ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தனர். பின்னர் ரவீந்திரனின் ஸ்ட்ரெஸ் ஃபுல்லான வாழ்க்கை பார்த்த மனைவி பிரிந்து சென்று விட்டதாக ரவீந்திரன் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். தற்போதைய இருவரும் திருமணம் செய்து கொண்டு தங்களது வாழ்க்கையை சந்தோஷமாக ஆரம்பித்துள்ளனர். அடிக்கடி புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். தற்போது அவர்கள் கொடுத்துள்ள பேட்டி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருக்கிறது.

அவர்கள் இருவரும் குறித்த மீம்ஸ்கள் பற்றி அவர்களிடம் கேட்கப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது அவர்கள் பார்த்து ரசித்த மீம்ஸ் ஒன்று திருமணம் ஆன உடனேயே தனது மனைவியை அவர் தங்கத்தினாலேயே அலங்கரித்தார் என்ற மீம்ஸை பார்த்து சிரித்ததாகவும், பின்னர் 70 கோடிக்கு மனைவிக்கு ஒரு தனி பங்களா கட்டிக் கொண்டிருப்பதாகவும், மனைவிக்காக தனித்தீவு வாங்கி இருப்பதாகவும் போன்ற மீன்கள் தங்களுக்கு சிரிப்பை வரவழைத்ததாக அவர் கூறினார். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..
Youtube Video Code Embed Credits: Thanthi TV