“ஸ”வை நீக்கி முதல்வர் ஸ்டாலினை எப்படி அழைக்க வேண்டும் – அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் பா.ஜ.க வின் மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி.

வெளியிட்டது

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று, சமூக வலைதளமான ட்விட்டர் பக்கத்தில், ஓவியர் சந்தோஷ் நாராயணன் வரைந்திருந்து இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பதிவிட்டு பெரும் வரவேற்பைப் பெற்ற தமிழணங்கு ஓவியத்தை பகிர்ந்து, “எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே” என பதிவிட்டிருந்தார்.

இதை அடுத்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும், தனது ட்விட்டர் பதிவில், “எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே” என்று பதிவிட்டிருந்தார். ஆனால் இந்தப் பதிவில், வேறு தமிழன்னை ஓவியத்தை அவர் பகிர்ந்திருந்தார்.

"ஸ"வை நீக்கி முதல்வர் ஸ்டாலினை எப்படி அழைக்க வேண்டும் - அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் பா.ஜ.க வின் மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி. 1

இந்நிலையில், தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழணங்கைப் போற்றுகிறோம் என்ற போர்வையில், தமிழ் எழுத்துகளுடன் ‘ஸ’ வையும் இணைத்துப் படம் போடும் போதே உங்களின் கூப்பிய கரங்களுக்குள் மறைத்து வைத்திருக்கும் கூர்வாள் தன் உண்மை முகத்தைக் காட்டி விட்டது. இதைத் தான் ‘தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும்”என வள்ளுவர் அடையாளம் காட்டிப் போனார்” என, அண்ணாமலையை விமர்சனம் செய்திருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்து, தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழகத்தின் தொழில் துறை அமைச்சர் நாங்கள் வெளியிட்ட தமிழன்னையின் படத்தில் உள்ள “ஸ” என்ற எழுத்தைக் கண்டெடுத்து விமர்சித்ததாக அறிகிறேன். “தமிழ் தமிழ்” என்று முழக்கமிடும் தமிழக முதல்வரின் பெயரில் உள்ள முதல் எழுத்தை வைத்தமைக்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவிப்பது வியப்பாக உள்ளது.

“ஸ”வை நீக்கி அதற்கு மாற்று எழுத்தைக் கண்டுபிடிக்கத் தமிழக அரசு உடனடியாக ஒரு குழு அமைக்க வேண்டும். அதுவரை ஸ்டாலின் என்ற பெயர் எவ்வாறு அழைக்கப்பட வேண்டும் என்று தொழில்துறை அமைச்சர் மக்களுக்கு அறிவுரைக்க வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்” என, தெரிவித்து உள்ளார்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்