
தமிழ்நாட்டின் 10ம், 11ம் மற்றும் 12ம் வகுப்புகளின் பொதுத் தேர்வு நேரம் அதிகரிக்கப்பட்டது. முன்பு மாணவர்கள் இரண்டரை மணி நேரத்திற்குத் தேர்வு எழுதினர். இப்போது வரும் 2020ம் ஆண்டுக்கான பொதுத் தேர்வு நேரம் மூன்று மணி நேரமாக அதிரகரிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு தமிழகப் பள்ளிக்கல்வித்துறை அரசாணை புதிய பாடத்திட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. ஆதலால் 10,11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு வருகிற 2019-2020-ம் கல்வியாண்டில் புதிய பாடத்திட்டத்தின் படி பொதுத் தேர்வு நடைபெறும் என்று கூறியுள்ளனர். ஏற்கனவே 3 மணிநேரமாக இருந்த பொதுத் தேர்வு 2 ½ மணிநேரமாக மாற்றப்பட்டது. ஆனால் மாணவர்களுக்கு போதிய நேரம் இல்லாததால் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் தேர்வின் நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அதனை ஏற்று பள்ளிக்கல்வித்துறை அரசாணை நேரத்தை மீண்டும் அதிகரித்துள்ளனர்.
ஆதலால் புதிய பாடத்திட்டத்தின் கீழ் 11ம் 12ம் வகுப்புகளின் பொதுத் தேர்வு 600 மதிப்பெண்களுக்கு மற்றும் 10ம் பொதுத் தேர்வு 500 மதிப்பெண்களுக்கு தலா மூன்று மணிநேரம் நடைபெறும். இதனால் மாணவர்கள் நிதானமாக அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க முடியும் என்று கூறுகின்றனர்.