ஜம்மு காஷ்மீர் மாணவர்கள் தேர்வுக்குத் தயாராக இல்லை..!!

ஜம்மு காஷ்மீர் மாணவர்கள் தேர்வுக்குத் தயாராக இல்லை..!! 1

ஜம்மு காஷ்மீரில் உள்ள மாணவர்கள் இந்த வருடத்திற்கான ஆண்டு தேர்வுகளுக்குத் தயாராக இல்லை என்று கூறி வருகின்றனர். ஆனால் திட்டமிட்டப்படி ஆண்டு தேர்வை நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

கடந்த ஆகஸ்டு மாதத்தில் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு நீக்கியது (ஆர்டிகள் 370). ஆதலால் அம்மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. ஆதலால் பாடத்திட்டம் முழுமையாக நடத்தப்படவில்லை. பாதி பகுதி தான் நடத்தப்பட்டிருப்பதாகவும் ஆதலால் மாணவர்கள் முழு பாடத்தையும் படித்து முடிக்க கடினமாக இருப்பதாகவும் தங்களுக்கு நடத்தப்பட்ட பாடம் வரை மட்டும் தேர்வில் கேட்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் டியூஷன் மையங்களும் இயங்கவில்லை என்று மாணவர்கள் கூறியுள்ளனர்.

விளம்பரம்

மேலும் பள்ளிகள் இயங்காத இம்மாதங்களில் கூட பள்ளி நிர்வாகங்கள் மாணவர்களிடம் இருந்து கல்வி கட்டணத்தை வசூலிக்கப்பட்டதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டினர். ஆனால் ஆளுநரின் நிர்வாகம் கால அட்டவணையின்படி பரீட்சைகளை நடத்துவதற்கும் பாடத்திட்டத்தில் எந்தக் குறைப்பையும் வழங்குவதற்கும் சமரசம் செய்யவில்லை என்று பள்ளி கல்வி இயக்குநரகம் (டி.எஸ்.இ.கே) அதிகாரிகள் கூறியுள்ளனர்.

விளம்பரம்

Leave a Comment