Categories: கல்வி

ரத்த பரிசோதனை 10 நிமிடம் போதும்! ‘மாப்ஸ்கோப்’ என்ற புதிய கண்டுபிடிப்பு அண்ணா பல்கலைக்கழகம் சாதனை!!

வெளியிட்டது
ரத்த பரிசோதனை 10 நிமிடம் போதும்! ‘மாப்ஸ்கோப்’ என்ற புதிய கண்டுபிடிப்பு அண்ணா பல்கலைக்கழகம் சாதனை!! 1

அண்ணா பல்கலைக்கழகம் புதிய ஒரு நுண்ணோக்கியைக் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளது. ‘மாப்ஸ்கோப்’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இது அலைபேசி மற்றும் நுண்ணோக்கியின் செயல்பாடுகளை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டுள்ளது. வழக்கமான நுண்ணோக்கியின் மேற்பரப்பில் பூதக்கண்ணாடி இருக்கும். ‘மாப்ஸ்கோப்’பில் அதற்குபதிலாக ஒரு அலைபேசி பொருத்தப்பட்டுள்ளது.

இந்த அலைபேசி சோதனைக்காக வைக்கப்பட்டிருக்கும் கண்ணாடி பட்டையில் பூசப்பட்டிருக்கும் ரத்த மாதிரியைப் புகைப்படம் பிடிக்கிறது. பின்னர் அலைபேசியில் உள்ள செயலி, ரத்தத்தைச் சோதனை செய்து விடுகிறது. அடுத்த 10 நிமிடங்களில் ரத்தத்தின் வகை கண்டுபிடிக்கப்படும்.

நுண்ணோக்கி வழியாக 1000 மடங்கு பெரிதாக்கப்பட்ட ரத்த அணுக்களை அலைபேசி படம் எடுத்துக் கொள்கிறது. பின்னர் அதில் பொருத்தப்பட்டிருக்கும் செயலி ரத்த அணுக்களில் எத்தனை சிவப்பு ரத்த அணுக்கள், வெள்ளை ரத்த அணுக்கள், மற்றும் பிளேட்லெட்ஸ் உள்ளன என்பதை கணக்கிடுகிறது. இதன் அடிப்படையில் ரத்த சோகை உள்ளதா அல்லது மலேரியா, டெங்கு போன்றவற்றுக்கான நோய்க்கூறுகள் காணப்படுகிறதா என்பதை அலசி ஆராய்ந்து முடிவைத் தெரிவிக்கிறது.

சராசரியாக ஒரு நுண்ணோக்கியின் விலை ரூ.40 ஆயிரமாகும். ஆனால், ‘மாப்ஸ்கோப்’ ரூ.10 ஆயிரத்துக்கும் குறைவான செலவில் உற்பத்தி செய்ய முடியும் என்கின்றனர்.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்