
நைஜீரிய கடல் பகுதியில் ஹாங்காங் கொடியுடன் விஎல்சிசி, நேவ் கான்ஸ்டிலேஷன் என்ற கப்பல் நைஜீரிய இம்மாதம் 3 ஆம் தேதி கடற்பகுதியை கடக்கும்போது கடற்கொள்ளையர்களால் கடத்தி வைக்கப்பட்டது. அதில் 18 இந்தியா்கள் உள்பட 19 போ் இருந்தனர்.
இந்த கப்பலில் இந்தியர்கள் உள்ளதை அறிந்து, நைஜீரியாவில் உள்ள இந்தியத் தூதரகம் அந்நாட்டு அதிகாரிகளை தொடா்பு கொண்டு கடத்தப்பட்ட இந்தியா்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வந்தது. இந்த நிலையில், கடத்தப்பட்ட 18 இந்தியர்களும் பத்திரமாக மீட்கப்பட்டதாக நைஜீரியாவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள டுவிட் பதிவில், “ நைஜீரியாவின் கடற்படை மற்றும் கப்பல் நிறுவனம், பணையக்கைதிகளாக பிடிக்கப்பட்டு இருந்த 18 இந்தியர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளது. இந்தியர்கள் பாதுகாப்பாக மீட்க உதவிகரமாக இருந்த அனைத்து தரப்பினருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.