உக்ரைன் பயணிகள் விமானத்தை இரண்டு ஏவுகணைகள் தாக்கியதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது.

அமெரிக்கா-ஈரான் நாடுகளுக்கு இடையிலான போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், கடந்த இரு வாரங்களுக்கு முன்பு உக்ரைன் நாட்டுக்கு சொந்தமான பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.
இதனை ஒப்புக்கொள்ளாத ஈரான் அரசு, அமெரிக்கா போர் விமானம் என கருதி பயணிகள் விமானம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஒப்புக்கொண்டு கோரியது.
உக்ரைன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் குறித்து விசாரணையை ஈரானின் போக்குவரத்துத் துறை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் முதற்கட்ட விசாரணை அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில், இரண்டு இடைமறித்து தாக்கும் திறன் கொண்ட ஏவுகணை தாக்கி விமானம் வெடித்ததாக கூறப்பட்டுள்ளது.