Categories: சமூகம்

2 ஆம் கட்ட உள்ளாட்சி தேர்தல்! வாக்கு பதிவு தொடங்கியது!!

வெளியிட்டது
2 ஆம் கட்ட உள்ளாட்சி தேர்தல்! வாக்கு பதிவு தொடங்கியது!! 1

சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்கள் தவிர உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 91 ஆயிரத்து 975 பதவி இடங்களை நிரப்ப தேர்தல் 2 கட்டமாக நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதே போல் 156 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 260 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 2, 546 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 37,830 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 4, 700 கிராம ஊராட்சி தலைவர்கள் என மொத்தம் 45,336 பதவிக்கு முதற்கட்டமாக தேர்தல் கடந்த 27-ந்தேதி நடத்தப்பட்டது. 24, 680 வாக்குச்சாவடிகளில் நடந்த வாக்குப்பதிவில் 76.19 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன.

இந்நிலையில், 158 ஒன்றியங்களில் உள்ள 255 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 2,544 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 38,916 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 4,924 கிராம ஊராட்சி தலைவர்களுக்கு என்று மொத்தம் 46,639 பதவி இடங்களுக்கான 2-ம் கட்ட தேர்தல் இன்று காலை 7 மணி முதல் தொடங்கி மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

மேலும், கடம்பத்தூர் ஒன்றியத்தில் முதல்கட்ட வாக்கெடுப்பில் சூறையாடப்பட்ட வாக்குசாவடி எண் 83 மற்றும் 84 ஆகிய 2 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. 2 கட்ட தேர்தலிலும் பதிவான வாக்குகள் எண்ணிக்கை வருகிற 2ந்தேதி 310 மையங்களில் நடைபெற உள்ளது.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்