பெண் அதிகாரிகளின் கட்டளைகளை ஏற்க மனம் பக்குவமடையவில்லை!

இராணுவத்தில் பெண்களுக்கு அதிகாரமிக்க பதவிகளை வழங்கினால், அவர்களது உத்தரவுகளை ஆண் இராணுவ வீரர்கள் ஏற்க மாட்டார்கள் என மத்திய அரசு உச்சநீதி மன்றத்தில் தெரிவித்துள்ளது.

பெண் அதிகாரிகளின் கட்டளைகளை ஏற்க மனம் பக்குவமடையவில்லை! 1
பெண் இராணுவ படை

இந்திய இராணுவத்தில் நீண்ட காலமாக ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு சமஉரிமை கோரப்பட்டு வருகிறது. ஆனால் மத்திய அரசாங்கமோ இந்த விவகாரத்தில் தயக்கம் கட்டி வருகிறது.

விளம்பரம்

மேலும், தற்போது முப்படைகளின் தலைவராக உள்ள பிபின் ராவுத், “பெண்களை போர் களத்திற்கு அனுப்பினால் பாலியல் தொடர்பான பிரச்சனை எழும்” என சர்ச்சையை கிளப்பியிருந்தார்.

இராணுவத்தில் பெண்களுக்கு சமத்துவம் வேண்டும் என சில பெண் இராணுவ அதிகாரிகளால் உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டன.

விளம்பரம்

இந்த மனு மீதான விசாரணையை மேற்கொண்ட நீதிபதிகள் சந்திரசூட் மற்றும் அஜய் ரஸ்தோகி தலைமையிலான அமர்வு மத்திய ராசிடம் விளக்கம் கேட்டிருந்தது.

போர் காலங்களில் பெண் வீராங்கனைகள் கைதிகளாக பிணை பிடிக்கப்படுவது, வெவ்வேறான உடல் கூறுகள் போன்ற காரணங்களால் ஆண் பெண் என இருபாலரையும் சமமாக நடத்த முடியவில்லை என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

விளம்பரம்
தொடர்புடையவை  காலநிலை மாற்றத்தால் சீரழியும் வேளாண்துறை!

மேலும், கர்ப காலம், மாதவிடாய் காலம் போன்ற நேரங்களில் மிகுந்த சிக்கலை சந்திக்க நேரிடும். அது மட்டுமின்றி பெண் அதிகாரிகளின் கட்டளைகளை ஏற்கும் அளவிற்கு ஆண் படை வீரர்களுக்கு மனம் பக்குவமடையவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

விளம்பரம்

Leave a Comment