டெல்லி பாஜகவின் பிரச்சார பாடல் இரு சமூக பிரிவுகளிடையே கலவரத்தை உருவாக்கும் வண்ணம் இருப்பதால், இது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளன.

டெல்லியில் வரும் 8ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் பிரசார களம் சூடுபிடித்திருக்கிறது. நாடு முழுக்க உள்ள தலைவர்கள் டெல்லியில் குழும்பி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் பாஜவின் பிரச்சார பாடல் மிக பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே முஸ்லிம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ய வேண்டும் என்றெல்லாம் பாஜவினர் பிதற்றி இருந்த நேரத்தில், இந்த பாடல் மேலும் சிக்கலை உருவாக்கியுள்ளது.
திரைப்பட தயாரிப்பாளர்கள் அமித் மகாந்தி மற்றும் ருச்சிகா நேகி, வழக்கறிஞர்கள் காயத்ரி சைனி மற்றும் ஷோமோனா கன்னா, மற்றும் எழுத்தாளர் பார்வதி சர்மா ஆகியோர் கைழுத்திட்டு தேர்தல் ஆணையத்தில் புகார் மனுவை அனுப்பியுள்ளனர்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் சிறுபான்மை மக்களையும், போராட்டக்காரர்களை குறிவைத்து பாடல் இயக்கப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது.