350வது விக்கெட்: அஸ்வின் அசத்தல்

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தனது 350வது விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார் ரவிச்சந்திர அஸ்வின்.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. தற்போது மிக பெரிய இமாலய இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்கா அணி விளையாடி வருகிறது.

350வது விக்கெட்: அஸ்வின் அசத்தல் 1

இப்போட்டியில் 5ஆம் நாளான இன்று நடைபெற்று வருகிறது. அணியின் 11வது ஓவரை இந்தியாவின் அஸ்வின் வீசினார். அந்த ஓவரின் 5வது பந்தில் டி புருயின் அடித்து ஆட முற்படட போது பந்து ஸ்டெம்பில் பட்டு ஆட்டமிழந்தார். டி புருயினின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் தனது டெஸ்ட் போட்டியில் 350வது விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

இதனால் இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் செய்த சாதனையை அஸ்வின் சமன் செய்துள்ளார்.

இதற்கு முன்னர் முரளிதரன் 66 போட்டிகளில் இந்த சாதனையை நிகழ்த்திருந்தார். அதே போல தற்போது தனது 66வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் அஸ்வின் இந்த சாதனை நிகழ்த்தி சமன் செய்துள்ளார்.

33 வயதான அஸ்வின் இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் 27 முறை 5 விக்கெட்டிற்கு மேல் எடுத்திருக்கிறார் .

ஆனால் சமீப காலமாக இந்திய அணியில் அஸ்வினுக்கு போதிய அளவிற்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை என இந்தியாவின் கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர் குற்றம் சாட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்