திரைப்படத் துறையில் ஒளிப்பதிவாளராக சிறந்த நடிகராகவும் வலம் வருபவர் நட்டி நடராஜ் என்னும் நடராஜன் சுப்ரமணியன். “லாஸ்ட் ட்ரெயின் டு மஹாகாளி” என்னும் இந்தி ஷாட் ஃபிலிமிற்கு முதன் முதலாக ஒளிப்பதிவு செய்தார். பிறகு ‘யூத்’ படத்தின் ஒளிப்பதிவாளராக சினிமா துறைக்குள் நுழைந்தார். அதில் சிறிய வேடத்தில் நடிக்கவும் செய்தார். இந்தி, தெலுங்கு, மலையாளப்

படங்களிலும் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். சில படங்களில் நடித்தும் “சதுரங்க வேட்டை ” படம் தான் அவருக்கு சினியுலகில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்றே கூறலாம். சிறப்பான நடிப்பினால் பிரபலமானார். பிறகு நம்ம வீட்டு பிள்ளை, சமீபத்தில் வெளியான கர்ணன் படத்தில் வில்லனாக நடித்து அசத்தியிருப்பார். தற்போது ‘இன்ஃபினிடி’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ஹாருன் இயக்கத்தில் “வெப்” என்கிற சைக்கோ திரில்லர் வெப் சீரிஸில் 4 கதாநாயகிகள் உடன் நட்டி நடிக்கப் போவதால் அதற்கான பூஜை கடந்த மாதம் நடைபெற்றது என்பதை நாம் அறிவோம். தற்போது 4 கதாநாயகிகளாக ஷில்பா மஞ்சுநாத், அனன்யா மணி, சாத்வி பாலா, சுப்ரியா மலர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஷூட்டிங் தொடங்கி விட்டதாம். இதில் நட்டி சைக்கோ வில்லனாக நடித்து வருகிறாராம்.