
கியூபா நாட்டில் 43 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக அதன் பிரதமர் நியமிக்கப்பட்டுள்ளார். அந்நாட்டின் சுற்றுலா அமைச்சர் மானுவல் மார்ரீரோ க்ரூஸ் அவர்கள் தான் அந்நாட்டின் பிரதமராக பதவி ஏற்றுள்ளார்.
கியூபாவில் கடந்த 43 வருடங்களாக பிரதமர் நியமிக்கப்படவில்லை. கடைசியாக 1956 முதல் 1976ம் ஆண்டு வரை பிடல் காஸ்ட்ரோ அவர்கள் கியூபாவின் பிரதமராக இருந்தார். அதற்கு பிறகு கியூபாவில் பிப்ரவரி மாதத்தில் புதிய அரசியலமைப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதில் அதிபரின் பணிசுமையை குறைக்க வகை செய்யப்பட்டது. அதற்கேற்ப அந்நாட்டின் பிரதமராக 5 ஆண்டுகளுக்கு மானுவல் மார்ரீரோ க்ரூஸ் அவர்கள் அதிபர் மிகேல் டயாஸ் கனால் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு அந்நாட்டு தேசிய சபையும் ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் மானுவல் மார்ரீரோ க்ரூஸ் அவர்கள் 16 வருடங்களாக அந்நாட்டின் சுற்றுலா அமைச்சராக செயல்பட்டார். மேலும் அமைச்சராக இருப்பதற்கு முன்பு அவர் கியூபாவின் ஆயுதப் படையில் ஒரு கர்னலாக இருந்தார்.