Categories: சமூகம்

5ஆம் மற்றும் 8ஆம் வகுப்பு பொது தேர்வு ரத்து

5ஆம் மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு நடைபெறவிருந்த பொது தேர்வு ரத்து செய்யப்படுவதாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

புதிய கல்வி திட்டத்தில் மாணவர்களின் திறனை மேற்படுத்த 5ஆம் மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொது தேர்வு முறையை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டது.

5ஆம் மற்றும் 8ஆம் வகுப்பு பொது தேர்வு ரத்து 1
பொது தேர்வுக்கு எதிராக போராடும் பள்ளி மாணவர்கள்

அதன் படி பல்வேறு மாநிலங்கள் இந்த திட்டத்தினை ஆதரித்தன. அதேவேளையில் பல மாநிலங்கள் எதிர்த்தன. தமிழ்நாட்டில் ஆளும்கட்சியும், மத்திய பாஜக கூட்டணி கட்சியான அஇஅதிமுக இந்த திட்டத்தை செயல்படுத்த போவதாக அறிவித்தது.

ஆனால் தமிழ்நாட்டில் இந்த திட்டம் பலத்த எதிர்ப்பினை சந்தித்தது. இந்த திட்டம் அன்றைய காலத்தில் ராஜகோபாலாச்சாரியார் கொண்டுவந்த குலக்கல்வி திட்டத்தின் புது உருவம் என எதிர்க்கட்சிகள், சமூக ஆர்வலர்கள், மருத்துவர்கள் என பலதரப்பட்ட மக்கள் எதிர்வினையை ஆற்றினர்.

இந்த நிலையில், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளையும் ஏற்று பொதுத்தேர்வு முறை ரத்து செய்யப்படுவதாகத் தெரிவித்தார். மேலும் 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பழைய தேர்வு முறை தொடரும் என்றும் கூறினார்.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்