Categories: உலகம்

9/11 ஆண்டு விழாவில் காபூலில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் ராக்கெட் வெடிப்பு.

வெளியிட்டது

அமெரிக்கா மீதான 9/11 தாக்குதலின் ஆண்டு நிறைவு தினத்தன்று ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரமான காபூலில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் ராக்கெட் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டதால் பதற்றம் நிலவியது. ஆனால் அங்கிருக்கும் அதிகாரிகள் ஒரு மணி நேரத்திற்கு பிறகு எவருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்று அறிவிக்கப்பட்டதாக நேட்டோ கூட்டுப் படையினர் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய காபூல் மீது நள்ளிரவிற்குப்பின் புகை எழுந்தது. ஆதலால் சைரன்கள் கேட்கப்பட்டது. தூதரகத்திற்குள், ஊழியர்களுக்கு ராக்கெட் வெடிப்பை ஒலிபெருக்கி வழியாக அறிவிக்கப்பட்டது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலிபான்களுடனான பேச்சுவார்த்தையை ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து காபூலில் நடந்த பெரிய தாக்குதலாக இது அறியப்படுகிறது. கடந்த வாரம் நடத்தப்பட்ட இரண்டு தலிபான் கார் குண்டுகளால் பல பொதுமக்களும் இரண்டு நேட்டோ உறுப்பினர்களும் கொல்லப்பட்டனர்.

9/11 ஆண்டு நிறைவு விழா மிகவும் முக்கியமான நாள். இதே நாளில் 2001 ஆம் ஆண்டில் நியுயார்க்கில் இருந்த தலா 110 மாடிகளைக் கொண்ட உலக வர்த்தக மைய கட்டிடத்தின் மீது அல்கொய்தா தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட பயணிகளை கொண்ட இரண்டு விமானங்களை மோதியது. ஆதலால் உலகம் முழுவதும் பதற்றம் நிலவியது. சுமார் மூன்றாயிரம் அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். இரட்டை கோபுர தாக்குதலின் 18 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் செவ்வாய் கிழமை இரவு நேரத்தில் காபூலில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் அமெரிக்க தலிபான்கள் பற்றிய பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்குமா என்பது தெளிவாக அறிவிக்கப்படவில்லை.

சுபாஷினி

As someone who's watched the industry evolve over the years, I'm committed to bringing you the most authentic, insightful, and entertaining coverage of Tamil cinema, one story at a time. மகத்தான சாதனை புரிந்தவர்கள் யாவருமே, தோல்வி பல கடந்து வென்றவர்களே

வெளியிட்டது

புதிய செய்திகள்