தனது முதல் படமான ‘பருத்திவீரன்’ படத்திலேயே நடிப்பு திறமையை வெளிப்படுத்திய நடிகர் கார்த்தி தற்போது மணிரத்தினம் இயக்கும் ‘பொன்னயின் செல்வன்’ படத்தில் பிசியாக உள்ளார். படத்தின் முக்கால் பாகம் முடிவடைந்த நிலையில் தனது அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார் கார்த்தி.

இந்நிலையில் ‘குட்டி புலி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இயக்குனர் எம்.முத்தையா அடுத்தடுத்து பல படங்களை இயக்கினாலும் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை. 2015 இல் இவர் இயக்கத்திலும் கார்த்தி, ராஜ்கிரண், லஷ்மி மேனன், கோவை சரளா நடிப்பிலும் வெளியான ‘கொம்பன்’ படத்திற்கு மக்களிடையே வரவேற்பு கிடைத்ததை நாம் அறிவோம்.

ஆதலால் இரண்டாவது முறையாக கார்த்தியுடன் இணைகிறார் என்று கூறப்படுகிறது. இவ்வாறு தமிழில் மீண்டும் கம்பேக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் படத்திற்காக பல வேலைகள் பார்த்து வருகிறதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு ஞானவேல் ராஜாவின் ‘கிரீன்’ ஸ்டூடியோஸ் தயாரிப்பாளராக இருக்கலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளன. மேலும் சூரரைப்போற்று நடிகை அபர்ணா முரலி இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
