நகை கடை வழக்கு! குற்றவியல் நீதிமன்றத்தில் மணிகண்டன் மற்றும் கனகவல்லி!!

நகை கடை வழக்கு! குற்றவியல் நீதிமன்றத்தில் மணிகண்டன் மற்றும் கனகவல்லி!! 1

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தின் அருகே உள்ள லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் இருந்து கடந்த 2-ம் தேதி அதிகாலை நடைபெற்ற திருட்டு சம்பவம், தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நகைக்கடையின் சுவரை துளையிட்டு நகைக்கடையின் உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், தங்களின் அடையாளம் தெரியாமல் இருக்க மிக்கி மவுஸ் முகமூடி, கையுறை மற்றும் ஜெர்க்கின் அணிந்தபடி தங்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

கொள்ளைச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ், ஏழு தனிப்படைகள் அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டதுடன், திருச்சி மட்டுமல்லாது அரியலூர்,பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்ட போலீஸ்களை அலர்ட் செய்தார் தொடர்ந்து 48 மணி நேர போலீஸாரின் தீவிர விசாரணையில், திருவாரூர் மடப்புரம் பகுதியில் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது, இருசக்கர வாகனத்தில் செல்லும் கொள்ளையர்கள் குறித்து தகவல் தெரியவந்தது.

விளம்பரம்

இதையடுத்து, போலீஸார் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார் மணிகண்டன் என்பவரை விரட்டிப் பிடித்தனர். ஆனால், அவரின் கூட்டாளியும் நகைக்கடைக் கொள்ளையருமான சுரேஷ், தப்பித்து விட்டார் போலீஸார், மணிகண்டனைப் பிடித்து விசாரணை நடத்தியதில், அவர் வைத்திருந்த அட்டைப்பெட்டியில் 5 கிலோ மதிப்பிலான தங்க நகைகள் இருந்தன.கைப்பற்றப்பட்ட நகைகள் அனைத்தும் , லலிதா ஜூவல்லரி நகைக் கடையில் கொள்ளை போன நகையுடன் ஒத்துப்போனதால், மொத்த நகையும் மணிகண்டனின் கூட்டாளிகளான சுரேஷ் மற்றும் முருகன், கோபால் உள்ளிட்ட 7 பேர் கொண்ட கும்பல் கொள்ளையடித்ததும், இந்த கொள்ளைச் சம்பவத்தில் முருகன் மூளையாகச் செயல்பட்டதும் தெரியவந்துள்ளது.

தொடர்புடையவை  லாக்கப் மரணங்கள்: குஜராத்தில் குறைந்த அளவு வழக்கு பதிவு

போலீஸார், மணிகண்டன் மற்றும் தப்பியோடிய சுரேஷின் தாய் கனகவல்லி மற்றும் நண்பர்களைப் பிடித்து தீவிரமாக விசாரணை செய்தனர். மேலும், குற்றவாளிகள் குறித்து தகவலறிந்த திருச்சி மாநகர போலீஸார், திருச்சியில் இருந்து திருவாரூர் சென்றனர். 12 மணி நேரத்துக்கும் மேலாக தஞ்சை மண்டல போலீஸார் விசாரணை நடத்தி வந்தநிலையில், திருச்சி மாநகர போலீஸார் வசம் குற்றவாளிகள் ஒப்படைக்கப்பட்டனர்.தற்போது, முருகன் அவரது மைத்துனரான சுரேஷ் ஆகியோர் தலைமறைவாக உள்ள நிலையில், சுரேஷின் தாய் கனகவல்லி மற்றும் மணிகண்டன் ஆகியோரை திருச்சி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி திரிவேணியின் முன்னிலையில்,  சற்று முன் போலீஸார் ஆஜர்படுத்தினர். 

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment