இந்தியா அசத்தல் பௌலிங்: முதல் டெஸ்டில் வெற்றி

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் அசத்தலான பந்து வீச்சின் மூலம் வெற்றியை பதிவு செய்துள்ளது.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வந்தது. இப்போட்டியின் 5ஆம் நாளான இன்று தென் ஆப்பிரிக்கா அணி இமாலய இலக்கை நோக்கி விளையாடியது.

விளம்பரம்

ஆனால் தொடக்க முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து திணறி வந்த தென் ஆப்பிரிக்கா அணியின் முத்துசாமியும், டேன் பீட்டும் இணைந்து நிதானமாக ஆடினர். இவர்களின் ஆட்டத்தால் ஸ்கோர் பொறுமையாக அதிகரித்தது. பீட் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 56 ரன்னில் அவுட்டானார்.

இந்தியா அசத்தல் பௌலிங்: முதல் டெஸ்டில் வெற்றி 1

கடைசி கட்டத்தில், டிரா செய்ய போராடிய தென் ஆப்பிரிக்கா அணி இறுதியாக 191 ரங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த தோல்வியடைந்தது. இதனால் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.

விளம்பரம்
தொடர்புடையவை  வரலாற்றில் முதல் முறையாக தாமஸ் கோப்பையை வென்று இந்திய அணி சரித்திர சாதனை!!

2வது இன்னிங்ஸில் இந்தியாவின் முகமது சமி 5 விக்கெட்டுகளும், ஜடேஜா 4 விக்கெட்டுகளும், அஸ்வின் 1 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். அதே போல் தென் ஆப்பிரிக்காவில் முத்துசாமி 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் கடைசி வரை களத்தில் நின்றார்.

முதல் இன்னிங்ஸில் 176 ரங்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 127 ரன்களும் விளாசிய இந்தியாவின் ரோஹித் சர்மா ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment