மகளிருக்கான குத்துசண்டை போட்டியில் கால் இறுதிக்கு முன்னேறியுள்ளார் இந்திய வீராங்கனை மேரி கோம்.
ரசியாவில் மகளிருக்கான உலக குத்துசண்டை சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 51 கிலோ பிரிவில் ஆறு முறை உலக சாம்பியனும், இந்தியாவின் முன்னனி வீராங்கனையுமான மேரி கோம் விளையாடி வருகிறார்.
36 வயதான மேரி கோம் தந்து கால் இறுதிக்கும் முந்தைய சுற்றில் தாய்லாந்தின் ஜூட்டாமாஸ் ஜிட்பாங்கியை கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் எதிர்கொண்டார். இதில் 5-0 என்ற புள்ளி கணக்கில் மேரி கோம் வெற்றி பெற்று கால் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

48 கிலோ பிரிவு உலக தொடரிலிருந்து நீக்கப்பட்ட பின், முதன்முறையாக உலக தொடரில் 51 கிலோ எடை பிரிவில் களம் கண்டுள்ளார் மேரி கோம் தனது அசாத்திய திறமையால் வெற்றி தடத்தை பதிவு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், இந்தியாவின் சவீதி பூரா (75 கிலோ) காலிறுதிக்கு முந்தைய போட்டியில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியுள்ளார். இவர் காமன்வெல்த் போட்டியில் 3 முறை வெண்கல பதக்கம் வென்ற இங்கிலாந்தின் லாரன் ப்ரைஸ் என்பரிடம் தனது வெற்றியை இழந்தார்.