4 ஆண்டுகள் முன் காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தாவும் தெலுங்கு நடிகர் நாகா சைதன்யாவும் கடந்த ஆண்டு அக்டோபர் மதம் விவாகரத்து பெறுவதாக அறிவித்தனர். முன்னணி நடிகையான சமந்தா விவகாரத்து பெற்றது, ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது.

அதில் இருந்து மீண்டு வந்து இப்போது மீண்டும் படங்களில் சுறுசுறுப்பாக நடித்து வருகிறார், கடைசியாக இவர் விஜய் சேதுபதி,நயன்தாராவுடன் இணைந்து விக்னேஷ் சிவனின் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்திருந்தார். படம் பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இப்பொது திருமணத்தை அறிவித்துள்ள விக்னேஷ் சிவன் நயன்தாரா வாழ்க்கவிலும் இவருக்கு ஏற்பட்ட நிலை ஏற்பட்டு விடுமோ என கிசுகிசுக்க படுகிறது.
நானும் ரௌடி தான் படத்தில் நடித்த போதில் இருந்து இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார் நயன்தாரா. அவர்களுக்கு வரும் ஜூன் மாதம் 9ம் தேதி திருப்பதியில் திருமணம் நடக்கவிருக்கிறது. திருமண நிகழ்ச்சிக்கு ஒரு சிலருக்கு மட்டுமே அழைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.
இதையடுத்து சென்னையில் நடக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
நயன்தாரா தற்போது கை நிறைய படங்கள் வைத்திருக்கிறார். அதனால் திருமணம் முடிந்த கையோடு தேனிலவுக்கு கிளம்பாமல் படப்பிடிப்பில் கலந்து கொள்ளப் போகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக நாக சைதன்யாவை திருமணம் செய்த சமந்தாவும், தேனிலவுக்கு செல்லாமல் படப்பிடிப்புக்கு கிளம்பினார். அந்த திருமணம் விவாகரத்தில் முடிந்துவிட்டது. இந்நிலையில் நயன்தாராவும் சமந்தா வழியில் செல்லவிருக்கிறாரா, இது நல்லதுக்கு இல்லையே என்கிறார்கள் ரசிகர்கள். நடிகைகள் கழுத்தில் தாலி ஏறிய கையோடு கணவரை விட்டுவிட்டு படப்பிடிப்புக்கு கிளம்புவது அதிகரித்து வருகிறது. இதே பாணியில் தேனிலவை நயன்தாரா தள்ளிப் போட்டதில் எந்தவித ஆச்சரியம் இல்லை. ஆனால் சமந்தவிற்கு ஏற்பட்ட நிலை நயன்தாராவிற்கு ஏற்பட்டு விட கூடாது என ரசிகர்கள் அவருக்கு கோரிக்கை வைத்துயுள்ளார்.