மத்திய அரசுக்கு எதிரான வரிகள்.. படத்தை தடை செய்க..கமல் மீது காவல் ஆணையரிடம் புகார் | Viram

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் “விக்ரம்”. விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் கொடுத்த வெற்றியைத் தொடர்ந்து கமலை வைத்து விக்ரம் படத்தை இயக்கியுள்ளார் லோகேஷ். இந்த படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கமலின் சொந்த நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கூடுதல் வலுசேர்க்கும் விதமாக அனிருத் இசையமைத்துள்ளார்.

மத்திய அரசுக்கு எதிரான வரிகள்.. படத்தை தடை செய்க..கமல் மீது காவல் ஆணையரிடம் புகார் | Viram 1

விளம்பரம்

இந்த படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து ஜூன் 3ம் தேதி திரையரங்குகளில் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வெளியான படத்தின் டீசர் மற்றும் ப்ரோமோ காட்சிகள் மில்லியன் பார்வையாளர்களை கடந்து சென்று கொண்டுள்ளது. இந்த நிலையில் நேற்று பத்தல பத்தல பாடல் வெளியாகியுள்ளது. வெளியான சில மணி நேரங்களில் பல லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்த பாடலை கமலே எழுதியுள்ளார். நீண்ட்இடைவெளிக்குப் பின் ஆண்டவர் போட்ட குத்து சாங் என்று நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர். Youtube Video Code Embed Credits: Thanthi Tv

மத்திய அரசுக்கு எதிரான வரிகள்.. படத்தை தடை செய்க..கமல் மீது காவல் ஆணையரிடம் புகார் | Viram 3

விளம்பரம்

 

தொடர்புடையவை  அரசியல் பற்றி பேசியதால் கடுப்பான உதயநிதி...மழுப்பிய சிவகார்த்திகேயன்.

இந்த நிலையில் இந்த பாடல் மத்திய அரசுக்கு எதிரான வாசகங்களை கொண்டிருப்பதாக கூறி சென்னை காவல் ஆணையத்தில் புகார் ஒன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்தல பத்தல எனத் தொடங்கும் அந்த பாடல் மத்திய அரசை விமர்சிக்கும் வண்ணம் இருப்பதாக சென்னை கொருக்குப் பேட்டை பகுதியஐ சேர்ந்த செல்வம் என்பவர் சென்னை காவல் ஆணையரிடம் ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார். திருடன் என்னும் பொருள்படும் வகையில் மத்திய அரசை விமர்சிப்பதாகவும், கொரொனோ தடுப்பூசி திட்டத்தை கேலி செய்யும் வண்ணம் பாடல் இருப்பதால் அந்த வரிகளை நீக்க வேண்டும் என்றும் அவ்வாறு நீக்காவிட்டால் படத்தை தடை செய்து, கமல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது. அந்த செய்தியை நீங்களும் காண.. Watch the below video..

விளம்பரம்

விளம்பரம்

Leave a Comment