90ஸ் கிட்ஸ்க்கு மிகவும் பிடித்தமான படங்களில் ஒன்றுதான் படையப்பா. எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத ஒரு படம். இந்த படத்தில் வரும் பாடல்கள், வசனங்கள், சண்டைக் காட்சிகள் என அனைத்தும் பட்டையை கிளப்பும். சூப்பர் ஸ்டார் அவர்களின் வாழ்க்கையில் ஒரு மைல் கல்லாக அமைந்த படம் என்று கூட சொல்லாம். புதுவிதமான தோற்றமும், ஸ்டைலையும் காட்டி ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்திருந்தார் ரஜினி. இதற்கெல்லாம் முத்தாப்பாக இருந்தது கே.எஸ் ரவிக்குமார் அவர்களின் இயக்கம். அனைத்து கதாபாத்திரங்களுக்கும் சரியான முறையில் காட்சிகளை அமைத்து படத்தை வெற்றி படமாக மாற்றிக் காட்டியுள்ளார் ரவிக்குமார்.

தனித்துவமான தனது நடிப்பால் அனைவரையும் கட்டிப் போட்டவர் ரம்யா கிருஷ்ணன் தான். நீலாம்பரி கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்து அசத்தியிருப்பார் ரம்யா. இந்த படத்தில் வரும் ஊஞ்சல் காட்சிகள் இன்று வரை மறக்க முடியாதவை. உட்கார நாற்காலி இல்லை என்று நீலாம்பரி சொல்ல, தோளில் கிடந்த துண்டை எடுத்து மேலே இருந்த ஊஞ்சலை இழுத்து ஸ்டைலாக கால் மேல் கால் போட்டு கெத்தாக அமர்வார் சூப்பர் ஸ்டார். இந்த காட்சியை 23 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் நடித்துக் காட்டியுள்ளார் ரம்யா கிருஷ்ணன். Embed Credits: Vijay tv

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் ஜோடிகள் என்ற நடனப் போட்டியில் நடுவராக உள்ளார் ரம்யா கிருஷ்ணன். அப்போது கூகுள் குட்டப்பா படத்தின் ப்ரோமஷனுக்காக கேஎஸ் ரவிக்குமார் இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளார். அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளர் ராஜூ படையப்பா படத்தின் ஊஞ்சல் காட்சியை செய்து காட்டுமாறு ரம்யாவிடமும், ரவிக்குமாரிடமும் சொல்ல அவர்கள் அந்ந காட்சியை செய்து காட்டுகின்றனர். “மின்சார கண்ணா வயசானாலும், உன் அழகும், ஸ்டைலும் இன்னும் உன்ன விட்டு போகல” என்று ரம்யா சொல்ல, சூப்பர் ஸ்டார் போல தேங்க்யூ, தேங்க்யூ என்று ரவிக்குமார் சொல்கிறார். செம்ம Cute ஆக உள்ள அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below video..