நானும் ரவுடிதான் படத்தின் மூலம் பிரபலமானவர் இயக்குனர் விக்னேஷ் சிவன், இந்த படத்தில் நடிகை நயன்தாராவை இயக்கினார் விக்னேஷ் சிவன். இந்த படத்திற்கு பின்னர் நயன்தாரா விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. அன்று முதல் தொடங்கி இன்று வரை காதல் வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். நயன்தாராவை பொறுத்தவரை தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத ஒருவர். சிறிய தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையை ஆரம்பித்து பின்னர் தனது கடுமையான முயற்சி மற்றும் திறமையால் படிப்படியாக உயர்ந்து இன்று தமிழ்நாட்டின் லேடி சூப்பர் ஸ்டாராக உயர்ந்துள்ளார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும் 
சில நாட்களுக்கு முன்பு நயன்தாரா விக்னேஷ் சிவனுடன் திருச்சியில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்றது தான் சில நாட்களாக ஹாட்டாப்பிக். அதை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட விக்னேஷ் சிவன், வாழ்க்கையில் சில முக்கிய முடிவுகளை எடுக்க உத்தரவு கேட்டு வந்துள்ளோம் என்று பதிவிட்டு இருந்தார். இதனால் திருமண உத்தரவை கேட்டுத்தான் இருவரும் கோவிலுக்கு சென்று இருக்கிறார்கள் என்ற பேச்சு எழத் தொடங்கியது. ஏற்கனவே வருகிற ஜீன் மாதம் இருவருக்கும் திருமணம் என்ற பேச்சுக்கள் உள்ள நிலையில் இன்று இருவரும் குல தெய்வ கோவிலுக்குச் சென்று பொங்கல் வைத்து வழிபாடு நடத்தியுள்ளது இந்த தகவலை உறுதிபடுத்தும் வண்ணம் உள்ளது. Youtube Video Code Embed Credits: Behindwoods TV

தற்போது சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் குல தெய்வ கோவிலுக்கு சென்று விட்டு கும்பகோணம் சென்ற நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் கோவிலில் மாலை மாற்றி கொண்டுள்ளனர். அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below video..