தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் வம்சி இயக்கிவரும் திரைப்படம்தான் தளபதி 66. பெயரிடப்படாத இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக தெலுங்கின் முண்ணனி நடிகை ராஷ்மிகா மண்டனா நடித்து வருகிறார். இதற்கு முன்பாக விஜய் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் சரியாக ஓடாத காரணத்தால் விஜயின் அடுத்தப்படமான தளபதி 66க்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்த படத்தை முடித்து கையோடு சமீபத்தில் வெளியாகி சக்கை போடு போட்டு வரும் விக்ரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜுடன் தளபதி 67ல் கைகோர்க்கிறார் விஜய். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது தளபதி 66ன் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. முதல் கட்ட படபிடிப்பு சென்னையில் நடந்து முடிந்துள்ளது. இரண்டாம் கட்ட படபிடிப்பிற்காக விஜய் ஹைதாராபாத் சென்றுள்ளார். அங்குள்ள ரமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் ஷூட்டிங் நடந்து வருவதாக தகவல்கள் வெளியானது. இந்த படத்தில் குஷ்பு, பிரபு, பிரகாஷ் ராஜ், யோகி பாபு போன்ற பல முண்ணனி நடிகர்கள் நடித்து வருகின்றனர். 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கலுக்கு இந்த படம் ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

தற்போது படத்தின் இரண்டாம் கட்ட படபிடிப்புகளும் நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மூன்றாம் கட்ட படபிடிப்பு ஜூன் 2ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் படப்பிடிப்பு தளத்திலிருந்து தினமும் ஒரு புகைப்படம் அல்லது வீடியோக்கள் கசிந்து வருகிறது. இதனால் படக்குழுவும், ரசிகர்களும் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகினர்.இரண்டு நாட்களுக்கு முன்பு விஜயுடன் குஷ்பு பேசிக் கொண்டு உள்ளது போன்று புகைப்படங்கள் வெளியான நிலையில் சில சண்டை காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியானது.

இந்த நிலையில் மீண்டும் ஒரு புகைப்படம் வெளியகியுள்ளது. அதில் ராஷ்மிகாவுடன் விஜய் இருப்பது போன்று உள்ளது. இதை விஜய் ரசிகர்கள் மிக கடுமையாக எதிர்த்து வருகின்றனர். புகைப்படங்கள் வெளியாகாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இயக்குனரிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். அந்த செய்தியை நீங்களும் காண..Watch the below Video…