நடிக்கும் நடிகர்களுக்கே தெரியாமல் சீரியலை முடித்து பேக் செய்து ஓடிய ‘பூவே உனக்காக’ சீரியல் டீம்

சன் டிவியில் இரவு 10.30க்கு ஒளிபரப்பாகி வந்த தொடர்தான் பூவே உனக்காக. இந்த தொடர் தற்போது திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. அதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. ஆரம்பம் முதலே பல குளறுபடிகளை சந்தித்து வந்தது இந்த தொடர். முதலில் இந்த சீரியலில் ஹீரோவாக நடித்து வந்த அருண் என்பவர் வெளியேறினார். பின்னர் அவரைத் தொடர்ந்து சீரியலின் ஹீரோயினான ஜோவிகா தான் உயர்படிப்புக்கு வெளிநாடு செல்வதால் சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ஜோவிகா பிரபல திரைப்பட நடிகர் விலிங்கஸ்டன் அவர்களின் மகள் ஆவார். பின்னர் இந்த நாடகம் சில நாட்கள் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வந்தது. பின்னர் 10.30க்கு மாற்றப்பட்டது. தற்போது நாடகம் முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிக்கும் நடிகர்களுக்கே தெரியாமல் சீரியலை முடித்து பேக் செய்து ஓடிய 'பூவே உனக்காக' சீரியல் டீம் 1

விளம்பரம்

ஹீரோவாக நடித்து வந்த அருண் வெளியேறிய பிறகு விஜய் டிவி பிரபலம் அசீம் நடித்து வந்தார். அசீம் வந்த பிறகு சீரியல் நன்றாக போய்க் கொண்டிருந்தது. தற்போது சீரியல் முடிந்துவிட்டதாக தகவல்கள் வந்த நிலையில் அது குறித்து நடிகர்களிடம் கேட்ட போது, ஜூன் 8ம் தேதி வழக்கம் போல் ஷூட்டிங்குக்கு சென்றபோது எடுக்கப்பட்ட காட்சிகள் அனைத்துமே வித்தியாசமாக இருந்ததாக கூறினர். வில்லன் திருந்திவிட்டது போலவும், ஹீரோயினுக்கு பழைய ஞாபகங்கள் திரும்ப வந்துவிட்டது போலவும் ஷூட்டிங் நடந்துள்ளது. இதனால் குழப்பமடைந்த நடிகர்கள் இயக்குனரிடம் சென்று கேட்ட போது அவரும் தனக்கு எதுவும் புரியவில்லை என்று பதிலளித்துள்ளார்.

தொடர்புடையவை  எழ வெடுத்த நா*ங்களா.! விஜய் டிவி மற்றும் கமலை வெளுத்து வாங்கிய அரசியல் தலைவர்.!

நடிக்கும் நடிகர்களுக்கே தெரியாமல் சீரியலை முடித்து பேக் செய்து ஓடிய 'பூவே உனக்காக' சீரியல் டீம் 3

விளம்பரம்

 

கடைசியில் விசாரித்த போதுதான் தெரிந்துள்ளது அன்றுதான் கடைசிநாள் ஷூட்டிங் என்று. சீரியலில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு தெரியாமலேயே பேக் செய்து விட்டு மொத்த யூனிட்டும் கிளம்பியிருக்கிறது. இதனால் அந்த நாடகத்தில் நடித்து வந்த நடிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர். ஆனால் இதற்கான உண்மை காரணம் நாடகத்தில் நடித்து வந்த ஒருவருக்கு கூட சரியாக சம்பளம் வழங்கவில்லை. கடைசி நாள் ஷூட்டிங் என தெரிந்தால் சம்பளத்தைக் கேட்டு நடிகர்கள் தொல்லை கொடுப்பார்கள் என்று சத்தமில்லாமல் தொடரை முடித்துவிட்டு வண்டியைக் கட்டியுள்ளனர் பூவே உனக்காக சீரியல் டீம்.

விளம்பரம்

நடிக்கும் நடிகர்களுக்கே தெரியாமல் சீரியலை முடித்து பேக் செய்து ஓடிய 'பூவே உனக்காக' சீரியல் டீம் 5

சேனல் தரப்பில் விசாரித்த போது ஜூன் 18ம் தேதி கடைசி எபிசோடு ஒளிபரப்பாக உள்ளதாகவும், தயாரிப்பாளர் மொபைல் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினர். பொதுவாக ஒரு சீரியல் முடியும் போது கேக் வெட்டி பிரிவு உபசாரங்கள் செய்து நாடகத்தை முடிப்பது வழக்கம். ஆனால் நாடகத்தில் நடிக்கும் நடிகர்களுக்கே தெரியாமல் நாடகத்தை முடித்து பேக் செய்துவிட்டு ஓடிய முதல் நாடகம் பூவே உனக்காக சீரியலாகத்தான் இருக்கும் என்று நெட்டிசன்கள் மரணமாக கலாய்த்து வருகின்றனர்.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment