விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி பல லட்சம் மக்கள் பார்த்து ரசிக்கும் ஒரு நிகழ்ச்சியாக இருந்து வருகிறது. சிறியவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை கோடி கணக்கான மக்கள் இந்த நிகழ்ச்சியை பார்த்து ரசித்து வருகிறன்றனர். 6 சீசன்களை முடித்து தற்போது ஏழாவது சீசனை ஒளிபரப்பி வருகிறது. முன்பு எப்போதும் போல் இல்லாத அளவிற்கு அதிகப்படியான கெட்ட வார்த்தைகள், சக போட்டியாளர்கள் மீது வன்மத்துடன் சண்டை இடுவது, Bully என்று சொல்லப்படும் கூட்டமாக சேர்ந்து ஒருவரை மனதளவிலான பிரச்சனைகள் கொடுப்பது, மேலும் முத்தம் கொடுப்பது, அதிகமாக பெண் போட்டியாளர்களை உரசுவது என்று முகம் சுளிக்கும் வண்ணம் இந்த சீசன் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருக்கும் கமல் இதையெல்லாம் கண்டு கொள்ளவே இல்லை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நிக்ஸன் என்கிற போட்டியாளர் ஐஷு என்கிற பெண் போட்டியாளரை அளவுக்கு மீறி தொடுவது, அவர் விரும்பாத போதும் அவரிடம் சென்று பேசுவது, அவர் உடுத்தியிருந்த வேட்டியை சரி செய்வது, கண்ணாடியில் முத்தமிட்டு கொள்வது என்று எல்லை மீறி நடந்து கொண்டிருந்தார். இதை பொறுத்துக் கொள்ள முடியாத ஐஷுவின் பெற்றோர்கள் தனது மகளை வெளியில் அனுப்புமாறு கேட்டு, ஐஷு எலிமினேட் செய்யப்பட்டு விட்டதாகவும் ஒரு தகவல் உலா வந்து கொண்டிருக்கிறது. இப்படியாக பிக் பாஸ் நிகழ்ச்சி சுமார் 50 நாட்களை நிறைவு செய்கிறது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சி பற்றி பேசியிருக்கும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், இந்த நிகழ்ச்சியை ஒரு மாதத்திற்குள் ஒழுங்குபடுத்தாவிட்டால் அந்த நிகழ்ச்சி நடக்கும் செட்டும், அந்த வீடும் இருக்காது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தனது கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “பிக்பாஸ் நிகழ்ச்சியை போய் பலரும் பார்த்துக் கொண்டிருக்கிறான். அந்த நிகழ்ச்சியை பார்த்தால் பையனும் பெண்ணும் அரைகுறையாக ஆடை அணிந்து கொண்டு, கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். கண்ணாடியில் முத்தம் கொடுக்கிறார்கள். படுக்கை அறையில் முத்தம், பாத்ரூமுக்கு சென்றால் அங்கும் முத்தம், எழவெடுத்த நாய்களா இதுவா என் தமிழ் சமூகத்திற்கு நீங்கள் தருகிற செய்தி? கோடிக்கணக்கான மக்கள் பார்க்கும் விஜய் தொலைக்காட்சி இதைத்தான் இந்த சமூகத்திற்கு வழங்குகிறதா? விஜய் தொலைக்காட்சியை கடுமையாக எச்சரிக்கிறேன். கமலஹாசனுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். தமிழருக்கென ஒரு தனி குணம் உண்டு. தமிழ் சமூகத்தை கேவலமான, மோசமான, அநாகரிகமான பண்பாட்டிற்கு அழைத்துச் செல்லாதீர்கள்.

தொடர்ந்து இந்த அசிங்கங்களும் அநாகரிகங்களும் பிக் பாஸில் அரங்கேறும் என்றால் பிக்பாஸ் என்கிற அந்த கூடமே இருக்காது என்று எச்சரிக்கிறேன். கோடிக்கணக்கான மக்கள் குடும்பம், குடும்பமான பார்க்கிற இந்த நிகழ்ச்சியில் எப்பவும் இரட்டை வசனங்கள். தரமான நிகழ்ச்சியை உங்களால் தர முடியவில்லை என்றால் சேனலை இழுத்து மூடி விட்டுப் போங்கள். ஆண் பெண் உறவு என்ற தாம்பத்தியத்தையும் படுக்கையறையில் காட்டுகிற மோசமான கலாச்சார சீரழிவு போன்றவற்றை கொண்டு வந்து திணிக்காதீர்கள். ஒரு மாத காலத்திற்குள் விஜய் டிவியும், கமலஹாசனும் இந்த நிகழ்ச்சியை ஒழுங்கு செய்யவில்லை என்றால், அதற்கான ஸ்டுடியோ படப்பிடிப்புக் கூடம் ஆகியவை இருக்காது, நாங்கள் அணி திரட்டி கொண்டு வருவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனின் இந்த பேச்சுக்கு பலரும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். நீங்களும் அவர் பேசிய அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்.! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: News Tamil 24×7