பத்திரிக்கை வெச்சாச்சு!!!மறக்காம எல்லாரும் கல்யாணத்திற்கு வந்துருங்க!!!இணையத்தில் வெளியான நயன் விக்கியின் திருமண பத்திரிகை!!!

நீண்ட நாட்களாகவே காதலித்து வந்த இயக்குனர் விக்னேஷ் சிவனும் நாயகி நயன்தாராவும் வருகிற ஜூன் 9ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள போகிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடியாக வலம் வருபவர்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன். நானும் ரவுடிதான் படத்தின் போது இவர்கள் இருவர் இடையே காதல் மலர்ந்துள்ளது. இந்நிலையில் பல வருடங்களாக இவர்களின் திருமணத்திற்காக ரசிகர்கள் காத்திருந்தனர்.

நயன்தாரா தன் பட வேலைகளில் படு பிசியாக இருந்ததால் திருமணத்தை தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தார். இந்நிலையில் விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது நயன்தாராவிடம் திருமணத்தை பற்றிய கேள்வியை தொகுப்பாளினி டிடி கேட்டார்.

விளம்பரம்

அப்போது தங்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாக மோதிரத்தை காண்பித்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தார் நயன்தாரா. இந்நிலையில் மீண்டும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காற்றுவாக்குல ரெண்டு காதல் படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா மற்றும் தயாரித்து நடித்தும் இருந்தார் நயன்தாரா.

பத்திரிக்கை வெச்சாச்சு!!!மறக்காம எல்லாரும் கல்யாணத்திற்கு வந்துருங்க!!!இணையத்தில் வெளியான நயன் விக்கியின் திருமண பத்திரிகை!!! 1

விளம்பரம்

இப்படம் எதிர்பார்த்த அளவு போகவில்லை என்றாலும் வசூல் ரீதியாக நல்ல லாபம் பெற்றதாக கூறப்படுகிறது. பத்ம வெளியான இரண்டு வாரங்களில் 50 கோடிக்கு மேல் வசூல் செய்தாகவும் அறிக்கை வெளியானது. மேலும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்து பல்வேறு தொழில்களில் முதலீடு செய்து வருகிறார்கள். இந்நிலையில் சமீபத்தில் ஜூன் 9ஆம் தேதி இவர்களுக்கு திருப்பதியில் திருமணம் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது.

தொடர்புடையவை  இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் கோழிப்பண்ணை செல்லதுரை படத்தின் ட்ரைலர் வெளியாகியது..!

அதன் பிறகு இவர்கள் இருவரும் அடிக்கடி கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. தற்போது விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் திருமண அழைப்பிதழ் சமூகவலைதளங்களில் லீக்காகி உள்ளது. அதாவது அந்த அழைப்பிதழில் ஜூன் 9ஆம் தேதி மகாபலிபுரத்தில் திருமணம் நடக்க உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விளம்பரம்

பத்திரிக்கை வெச்சாச்சு!!!மறக்காம எல்லாரும் கல்யாணத்திற்கு வந்துருங்க!!!இணையத்தில் வெளியான நயன் விக்கியின் திருமண பத்திரிகை!!! 3

விளம்பரம்

Leave a Comment