நடிகரும், இயக்குனருமான டி. ராஜேந்தர் அவர்களின் உடல்நிலை குறித்து விசாரிக்க போரூர் ராமசந்திரா மருத்துமனைக்கு நேரில் வந்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். கடந்த சில தினங்களாக டி.ராஜேந்தர் அவர்களின் உடல்நிலைப்பற்றி தொடர்ந்து செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. அவர் மிகவும் சீரியஸ் கண்டிசனில் இருப்பதாகவும், உயர்சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்து செல்ல உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. தமிழ் திரையுலகில் பன்முகத் திறமையாளராக வலம் வந்தவர் நடிகர் டி.ராஜேந்தர். நடிகர், பாடகர், பாடலாசிரியர், வசனகர்த்தா, இயக்குனநர் என பல்வேறு பரிணாமங்களில் தன் திறமையை காட்டியவர். அது மட்டுமில்லாமல் அரசியல்வாதியாக ஒரு கலக்கு கலக்கியவர். தி.மு.கவின் கொள்கை பரப்புச் செயலாளராகவும் இருந்துள்ளார். தனது அடுக்கு மொழி எதுகை மோனை வசனத்தால் இன்றைக்கும் பேசி பலரை கவர்ந்துள்ளார் என்று சொன்னால் மிகையாகாது.

டி.ராஜேந்தர் அவர்கள் உடல்நிலை குறித்து இரண்டு நாட்களுக்கு முன்பு சிம்பு விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் டி.ராஜேந்தர் அவர்களுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்ப்பட்டதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், பரிசோதனை செய்து பார்த்ததில் வயிற்றில் ரத்தக்கசிவு ஏற்ப்பட்டுள்ளதாகவும், மேலும் உயர் சிகிச்சைகாக வெளிநாடு அழைத்து செல்ல உள்ளதாகவும், அவர் முழு சுய நினைவுடன் நலமாக உள்ளார் என்றும் சிம்பு தனது அறிக்கையில் தெரிவித்து இருந்தார். திரைத்துறையில் மாபெரும் பங்காற்றிய அந்த கலைஞன் விரைந்து உடல்நலம் பெற வேண்டும் என் சிம்புவின் ரசிகர்கள் பலரும் பிராத்தனைகள் செய்து வந்தனர். Youtube Video Code Embed Credits: Kalaignar seithigal

கடந்த வாரங்களில் டி.ராஜேந்தர் அவர்களின் உடல்நிலை குறித்து வந்த செய்திகள் கவலையளிப்பதாக இருந்தது. அவர் ஆபத்தான நிலையில் இருந்ததாக வதந்திகள் கொடி கட்டிப் பறந்தன. ஆனால் ராஜேந்தர் அவர்களின் உடல்நிலையை விளக்கி சிம்பு கொடுத்த அறிக்கை அவரது ரசிகர்களுக்கு ஆறுதலை அளித்துள்ளது. மேலும் தற்போது முதலமைச்சர் நேரில் சென்று டி.ராஜேந்திரை சந்தித்துள்ளார். தி.மு.கவின் கொள்கைப்பரப்பு செயலாளராக இருந்தவரும், தி.மு.கவில் பூங்காநகர் தொகுதி எம்எல்ஏவாகவும் டி.ராஜேந்தர் இருந்துள்ளார். தி.மு.கவின் வெற்றிக்காக பாடுபட்ட அவரை நேரில் சென்று சந்தித்தது அவரது ரசிகர்களுக்கு மன ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது. அந்த செய்தியை நீங்களும் காண..Watch the below video