நடிகர் அஜித் இப்பொது தமிழ் சினிமாவின் முன்னணி நாயர்களில் ஒருவர். தமிழகத்தில் மிக பெரிய ரசிகர் பட்டாளம் கொண்டுள்ளார் இவர் தொடர்ந்து 150 கோடி, 200 கோடி வசூல் செய்யும் படங்களை நடித்து வருகிறார். இவருடைய அடுத்த படம் மாபெரும் பொருட்செலவில், இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் விறுவிறுப்பாக ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
எப்போதும் சமூக வலைத்தளங்களிலும், விருது விழாக்களிலும், என் போது வெளியில் கூட நடிகர் அஜித்தை பார்ப்பது கடினம். இவரை பார்க்க வேண்டும் என்றால் சாமிய மக்களை படத்தில் மட்டுமே காண முடியும். இருப்பினும் இவருக்கு வெறியான ரசிகர்கள் அதிகம்.
இப்போதுள்ள சூழ்நிலையில் நடிகர் விஜயும் அஜித்தும் ஒருத்தருடைய படத்தின் சாதனையை மற்றொருவர் படம் வெளிவரும் பொது அதனை முறியடித்து மாற்றி மாற்றி ரெகார்ட் செய்து வருகின்றனர். நடிகர் விஜய் சில வகையில் முந்துகிறார் என்றாலும், அவர் ஒவ்வொரு படத்திற்கும் மெனக்கெட்டு ப்ரோமோஷன் செய்து வருகிறார். ஆனால் படம் மட்டுமே நடித்து அஜித் அவருக்கு இணை போட்டியாக இருந்து வருகிறார்.
நடிகர் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரன். நடிகர் அஜித்தின் அனைத்து அறிவிப்புகளையும், வெளியுலக தொடர்புகளையும் இவர் தான் கையாண்டு வருகிறார். இவர் தனக்கென சமூக வலைத்தளமான ட்விட்டரில் அக்கவுன்ட் வைத்திருந்தும் அது எப்போதும் நடிகர் அஜித் குறித்த செய்திகள் வெளியிடுவார்.
இப்பொது இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ஒரு குதிரை கதையை சொல்லி பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த கதை குதிரையை கொண்டு செல்லும் ஒரு வயதான தம்பதியிரனை குறிக்கிறது.
அவர் வெளியிட்டுள்ள கார்ட்டூனில், கழுதையை வைத்து வாழ்க்கைத் தத்துவம் சொல்லப்பட்டுள்ளது. ‘ஒருவர் எதைச் செய்தாலும் அதை இந்த உலகம் விமர்சித்துக்கொண்டேதான் இருக்கும்’ எனக் குறிப்பிடும் விதமாக அந்தக் கழுதை கார்ட்டூன் அமைந்துள்ளது.
கதையின் நீதியாக- ஒருவரால் எல்லோரையும் திருப்திப்படுத்த முடியாது; நீங்கள் எதைச் செய்தாலும் அதில் குறைகூற சிலர் இருப்பார்கள். எனவே, உங்களுக்கு எது சரி என மனதுக்குப் படுகிறதோ அதைச் செய்யுங்கள் எனக் குறிப்பிடும் தொனியில் அந்தப் பதிவு அமைந்துள்ளது.
அஜித்தின் குரலாக சமூக வலைத்தளத்தில் ஒலிக்கும் இவர், ஏன் இவ்வாறு பதிவிட்டுள்ளார். அஜித் ஏன் இப்படி ஒரு கருத்தை பதிவு செய்ய ஆசைப்பட்டுள்ளார் என தெரியவில்லை. கிட்டத்தட்ட பாதி நெட்டிஸின்கள் இப்பொது இது யாருக்காக என தலையை உடைந்து வருகிறார்கள்.
