நேற்று நடந்த யானை பட ஆடியோ வெளியீட்டு விழாவில் இயக்குனர் ஹரி கெட்ட வார்த்தை பேசியது சர்ச்சையானது. அவர் வேண்டுமன்றே கெட்ட வார்த்தை பேசவில்லை ஒரு ஃபுளோவில் வந்து விட்டது என்பது போல் சமாளித்தார். ஆனால் தற்போது ப்ளூ சட்டை மாறன் ஹரியை விமர்சித்து ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். ப்ளூ சட்டை மாறனைப் பொறுத்த வரை எந்த இயக்குனாரக இருந்தாலும் சரி, எத்தகைய நடிகராக இருந்தாலும் அவர்கள் படங்கள் வெளியாகும்போது விமர்சனம் என்ற பெயரில் வறுத்து எடுத்துவிடுவார்.

படம் வெளியான உடனேயே பலர் ப்ளூசட்டை மாறன் விமர்சனம் எப்போது வரும் என்று காத்துக் கொண்டிருக்கும் அளவிற்கு யூடியூப்பில் பிரபலம். முண்ணனி நடிகர்களின் ரசிகர்கள் பலர் இவரை வசை பாடுவதுமுண்டு. படம் எடுப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? நீ ஈஸியா நின்னு விமர்சனம் பண்ணிட்டு போய்டுற என்ற கமெண்ட்டில் கழுவி கழுவி ஊற்ற, நானும் படம் எடுக்கிறேன் என்று ஒரு படத்தை எடுத்தார். ஆனால் அதுவும் சரியாக ஓடவில்லை. எனவே மீண்டும் திரை விமர்சனத்திற்கு திரும்பியுள்ளார் மாறன்.
![]()
தற்போது இயக்குனர் ஹரி அவர்களை சீண்டி ஒரு ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். அதில் “1,000 கோடி வசூல் தரும் பான் இந்தியா படங்களை எடுத்திருந்தாலும் பிரெஸ் மீட்டில் தலைக்கனம் இன்றி நாகரீகமாக பேசுகிறார்கள் ராஜமௌலி, பிரசாந்த் நீல், நடிகர் யஷ் போன்றவர்கள்.
ஆனால் மிஷ்கின், ஹரி போன்றோர் மீடியா முன்பு அருவருப்பாக பேசுவது கண்டனத்திற்கு உரியது என ஊடகத்துறையினர் கருத்து.” என்று பதிவிட்டு இருந்தார். தனது கருத்தை நேரடியாக சொல்ல தைரியமில்லாமல் ஊடகத்துறையினர் சொன்னதாக சொல்கிறீர்களே என சில நெட்டிசன்கள் ப்ளூ சட்டையை விளாசி வருகின்றனர்.
1,000 கோடி வசூல் தரும் பான் இந்தியா படங்களை எடுத்திருந்தாலும் பிரெஸ் மீட்டில் தலைக்கனம் இன்றி நாகரீகமாக பேசுகிறார்கள் ராஜமௌலி, பிரசாந்த் நீல், நடிகர் யஷ் போன்றவர்கள்.
ஆனால் மிஷ்கின், ஹரி போன்றோர் மீடியா முன்பு அருவருப்பாக பேசுவது கண்டனத்திற்கு உரியது என ஊடகத்துறையினர் கருத்து. pic.twitter.com/W0SKT4Nucm
— Blue Sattai Maran (@tamiltalkies) June 1, 2022
Twitter Original Source from: Blue Sattai Maran