சென்னையில் 2வது நாளாக நள்ளிரவில் கொட்டி தீர்த்த கனமழை!! சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் அவதி!!

சென்னையில் 2வது நாளாக நள்ளிரவில் கொட்டி தீர்த்த கனமழை!! சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் அவதி!! 1

சென்னையில் இரண்டாவது நாளாக நள்ளிரவில் கனமழை பெய்து வருகிறது . நீண்ட நேரம் பெய்த இந்த மழையால் அண்ணாசாலை மற்றும் நுங்கம்பாக்கம் சாலைகள் உள்பட பல்வேறு சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. பொதுமக்கள் தொடர் கனமழையால் அச்சம் அடைந்துள்ளனர்.

வடகிழக்கு பருவ மழை தொடங்கிய கடந்த 16 ஆம்தேதியில் இருந்து சென்னையில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று காலை வரை நீடித்த கனமழையால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.வாகனங்கள் முக்கிய சாலைகளில் செல்ல முடியாத அளவுக்கு கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தனர். பள்ளி குழந்தைகள் பள்ளிக்கு செல்வதற்கு கடும் அவதி க்குள்ளாகினர்.

விளம்பரம்

இந்நிலையில் சென்னையில் நேற்று நள்ளிரவு தொடங்கி இன்று அதிகாலை வரை பதிவான தொடர் மழையில் சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் 102 மில்லி மீட்டருக்கு மேல் மழை பெய்தது. இதேபோல் பெரம்பூரில் 117 மில்லிமீட்டரும், அயனாவரத்தில் 132 மில்லி மீட்டர் மழையும், மெரினாவில் 87 மில்லி மீட்டர் மழையும், கேகே நகரில் 67 மில்லி மீட்டர் மழையும் பெய்திருந்தது. இதேபோல் சென்னையை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் கனமழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

Leave a Comment