நான் பைத்தியமா? குடிகாரியா? நீ யாருயா என்ன பத்தி பேச.? பயில்வானை கிழித்து தொங்கவிட்ட சுசித்ரா

நடிகர் நடிகைகளை தனிப்பட்ட முறையில் தொடர்ந்து விமர்சித்து வரும் பயில்வான் ரங்கநாதனை பாடகி சுசித்ரா போனில் திட்டும் ஆடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் வில்லனாகவும், காமெடியனாகவும், துணை வேடங்களிலும் நடித்து வந்தவர் பயில்வான் ரங்கநாதன். இவர் 30 வருடங்களுக்கு மேலாக சினிமா துறையில் இருப்பதால் பல நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. பின்னர் சில காலம் பத்திரிக்கையாளராகவும் பணியாற்றியுள்ளார். இந்த அனுபவங்களை கொண்டு யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அனைத்து நடிகர்கள் மற்றும் நடிகைகளின் தனிப்பட்ட அந்தரங்க வாழ்க்கை பற்றி விமர்சித்து வருகிறார். வீடியோ வீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நான் பைத்தியமா? குடிகாரியா? நீ யாருயா என்ன பத்தி பேச.? பயில்வானை கிழித்து தொங்கவிட்ட சுசித்ரா 1

விளம்பரம்

பல்வேறு நடிகர் நடிகைகள் மது அருந்துவதாகவும், கஞ்சா புகைக்கிறார்கள், பாடி டிமாண்ட் என்று மிக அருவருப்பாக பேசி வருகிறார். ஆனாலும் இவரது பேச்சுக்கு பல ரசிகர்களும் உண்டு. திரைத்துறையில் இருப்பவர்கள் ரொம்ப ஒழுங்கா? பயில்வான் சொல்வது உண்மைதான் என்று அவரது ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் பயில்வான். அதில் பாடகி சுசித்ரா பைத்தியம், போதைக்கு அடிமையானவர் என்று கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதை பார்த்து கடுப்பான சுசித்ரா பயில்வானுக்கு போன் போட்டு கோபமாக திட்டியுள்ளார்.

தொடர்புடையவை  மன்னிப்பு கேட்காமல் மட்டமான விளக்கம் கொடுத்த ரோஹிணி திரையரங்கம்.! வச்சி செய்யும் நெட்டிசன்கள்.!

நான் பைத்தியமா? குடிகாரியா? நீ யாருயா என்ன பத்தி பேச.? பயில்வானை கிழித்து தொங்கவிட்ட சுசித்ரா 3

விளம்பரம்

அதில் எந்த ஆதாரமும் இல்லாமல் என்னைப்பற்றி அவதூறாக பேசினீர்கள் என்றி கேட்க? எனக்கு எழுதி கொடுத்ததைதான் நான் பேசினேன் என்று பயில்வான் பதிலளித்தார். மேலும் உங்களைப் பற்றி போலீசில் புகார் அளிக்க வேண்டும், உங்களை கைது செய்ய வேண்டும், பணத்தை வாங்கிட்டு நாக்கில் நரம்பில்லாமல் பேசுகிறீர்கள், ஒரு பொண்ண இவ்வளவு அசிங்கமாக பேசுகிறீர்கள், நீதிமன்றத்தில் போய் உங்கள் கருத்தை கூறுங்கள் என்று கோபமாகி இணைப்பை துண்டித்துவிட்டார். சுசித்ரா பிண்ணனி பாடகியாவார். சில நாட்களுக்கு முன்பு சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் அவரின் கணக்கு முடக்கப்பட்டு தவறான புகைப்படங்கள் பகிரப்பட்டது. இதனால் மிகுந்ந மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார் சுசித்ரா.

நான் பைத்தியமா? குடிகாரியா? நீ யாருயா என்ன பத்தி பேச.? பயில்வானை கிழித்து தொங்கவிட்ட சுசித்ரா 5

விளம்பரம்

அவரின் கணவரும் நடிகருமான கார்த்திக் குமார் சுசித்ராவிடம் இருந்து விவாகரத்து பெற்று விட்டார். தற்போது தனியாக வாழ்ந்து வரும் சுசித்ராவை மீண்டும் வம்பிழுத்து இருக்கிறார் பயில்வான். இந்த மாதிரி தொடர்ந்து நடிகர்கள் மீதும், நடிகைகள் மீதும் அவதூறு பரப்பி வரும் பயில்வானை கைது செய்ய வேண்டும் நடிகர் சங்கத்திடம் பலர் கோரிக்கையும் வைத்து வருகின்றனர். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the Below Video..

விளம்பரம்

Video Courtesy: NewsGlitz

விளம்பரம்

Leave a Comment