என் காதலி நயன்தாராவை கல்யாணம் பண்ணிக்க போறேன்.! வெட்கப்பட்டு பேசிய விக்னேஷ் சிவன்

நடிகை நயன்தாராவை ஜூன் 9ம் தேதி மகாபலிபுரத்தில் வைத்து கல்யாணம் செய்து கொள்ளப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன். நானும் ரவுடிதான் படத்தில் நடித்த போது விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவுக்கும் காதல் மலர்ந்தது. கடந்த ஆறு வருடங்களாக இருவரும் காதலித்து வருகின்றனர். இருவரும் எப்போது திருமணம் செய்து கொள்வார்கள் என்று ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து இருந்த நிலையில் வருகின்ற 9ம் தேதி மகாபலிபுரத்தில் திருமணம் நடைபெறுவதை உறுதி செய்தார் விக்னேஷ் சிவன். திருப்பதியில் வைத்து திருமணம் செய்து கொள்ள இருவரும் திட்டமிட்டு இருந்தனர். தற்போது பயண தூரம் உள்ளிட்ட சில காரணங்களால் இடத்தை மாற்றி உள்ளதாக அறிவித்துள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

என் காதலி நயன்தாராவை கல்யாணம் பண்ணிக்க போறேன்.! வெட்கப்பட்டு பேசிய விக்னேஷ் சிவன் 1

விளம்பரம்

இயக்குனர், நடிகர், பாடலசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை வாய்ந்தவர் விக்னேஷ் சிவன். நயன்தாராவுடன் காதல் ஏற்பட்ட பிறகு இருவரும் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். இருவரும் இணைந்து வெளிநாடுகளுக்கு டூர் செல்வது, திருப்பதிக்கு செல்வது, கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்துவது என்று ஊர் சுற்றி வந்தனர். சமீபத்தில் கொரோனா லாக்டவுன் சமயத்தில் நிச்சயம் செய்து கொண்டனர். இதன் பிறகு எப்போது திருமணம் செய்து கொள்வார்கள் என்ற கேள்விக்கு விடை தெரியாமலேயே இருந்து வந்தது. சமூக வலைத்தளங்களில் அவ்வபோது புகைப்படங்களையும், ரீல்ஸ் வீடியோக்களையும் பதிவேற்றும் போது கமெண்டில் திருமணம் எப்போது என்ற கேள்வியே இருக்கும்.

தொடர்புடையவை  யசோதா திரைப்படம் எப்படி இருக்கு.! முழு திரைவிமர்சனம் இதோ.! Tamilglitz Rating (?/5)

என் காதலி நயன்தாராவை கல்யாணம் பண்ணிக்க போறேன்.! வெட்கப்பட்டு பேசிய விக்னேஷ் சிவன் 3

விளம்பரம்

இதனால் இன்று செய்தியாளர்களை சந்தித்த விக்னேஷ் ஜூன் 9ம் தேதி என்னுடைய காதலி நயன்தாராவை திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும், வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு போகப் போகிறோம் என்றும் கூறினார். வருகின்ற 9ம் தேதி காலை மகாபலிபுரத்தில் நடைபெறும் திருமணத்திற்கு நெருங்கிய உறவினர்கள், நண்பர்களை மட்டுமே அழைத்துள்ளதாகவும் திருமணம் முடிந்த பிறகு 11ம் தேதி நயன்தாராவுடன் இணைந்து பத்திரிக்கையாளர்களை சந்திக்க உள்ளதாகவும் கூறினார். அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the Below Video..

விளம்பரம்

Video Courtesy: Thanthi Tv

விளம்பரம்

Leave a Comment