தமிழ்நாட்டில் ஜி.எஸ்.டி வரி வசூல் அதிகரிப்பு!

ஆட்டோமொபைல் மற்றும் இன்ன பிற தொழில்களில் ஏற்பட்ட மந்த நிலை காரணமாக இந்திய பொருளாதாரம் மந்த நிலையில் இருந்து வருகிறது. இருப்பினும்ம் நடப்பு நிதியாண்டில் தமிழ்நாட்டின் ஜி.எஸ்.டி வரி வசூல் 4.64 சதவிகிதமாக வளர்ச்சியை கண்டுள்ளது.

சரக்கு மற்றும் சேவை துறையில் அரசு செலுத்த வேண்டிய இழப்பீடு கணக்கை மதிப்பிடாமல், வரி வசூல் மட்டும் 42,765.12 கோடி ரூபாயாக உள்ளது.

விளம்பரம்
தமிழ்நாட்டில் ஜி.எஸ்.டி வரி வசூல் அதிகரிப்பு! 1

இதனை தவிர இழப்பீடு கணக்கை சேர்த்துக்கொண்டால் 47,963.12 கோடி ரூபாய் வருவாயாக உயர்ந்து 16.49 சதவிகித வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இதன் படி நடப்பு நிதியாண்டில் முதல் அரையாண்டில் ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.42,765.12 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. முந்தைய நிதியாண்டின் முதல் அரையாண்டில் ஜிஎஸ்டி வரி வசூல் 40 ஆயிரத்து 867 கோடியாக இருந்தது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அனைத்திந்திய உற்பத்தியாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் ரகுநாதன், “அண்டை மாநிலத்தை விட முதலீட்டிற்கு அதிகம் முக்கியத்துவம் தமிழ்நாட்டில் வழங்கப்படுவதால், இது வளர்ச்சி அடைந்துள்ளது. மந்த நிலை ஏற்படாமல் இருந்திருந்தால், வளர்ச்சி விகிதம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்” என்றார்.

விளம்பரம்
தொடர்புடையவை  தாக்குதலை முறியடிக்க தயாராக இருக்க வேண்டும்: சிதம்பரம்

மேலும், “தமிழ்நாட்டினை விட வேறு மாநிலங்களில் பெரிய நிறுவனங்களுக்கு வசதிகள் பெரிதாக இருப்பதால், இங்கு இருக்கின்ற சிறு,குறு தொழில்களை மேம்படுத்தி நம்மால் குறிப்பிட்ட வளச்சியை பெற முடியும்: என்றும் அவர் கூறினார்.

விளம்பரம்

Leave a Comment