
நடிகர் சத்யராஜ், இப்போதைய இந்திய திரையுலக ரசிகர்களுக்கு பாகுபலியின் கட்டப்பாவாக மிகவும் பிரபலம். கோயம்பத்தூரை சொந்த ஊரக கொண்ட சத்யராஜ் சினிமாவின் மீது கொண்ட அதீத காதலால் சென்னையை நோக்கி வந்தார். ஆரம்பத்தில் சில படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்கில் நடித்து வந்த இவர், பின்னர் சில படங்களில் அப்போதைய வில்லன் நடிகர்கள் பலருக்கும் அடியாளாக நடித்து வந்தார். தன்னுடைய கல்லூரி நண்பன் மணிவண்ணனுடன் இவர் கூட்டாக இணைந்து நடித்த படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற துவங்கின. குறிப்பாக ஜனவரி 1, நூறாவது நாள் போன்ற படங்களில் இவருடைய வில்லன் நடிப்பு ரசிகர்களை மிரட்டியது. மெல்ல சாவி என்ற படத்தில் நாயகனாக நடித்து, பின்னர் 80களின் முக்கிய நாயகனாக உருவெடுத்தார். இயக்குனர் பாரதிராஜாவின் “கடலோர கவிதைகள்” இவருடைய திரை பயணத்தில் மிகவும் திருப்புமுனையாக படமாக அமைந்தது.

அடுத்தடுத்து இவர் நடிப்பில் இவர் நாயகனாக நடித்து வெளியான “அமைதிப்படை, கடமை கண்ணியம் கட்டுப்பாடு, அண்ணா நகர் முதல் தெரு, என் பொம்முக்குட்டி அம்முவுக்கு, சின்னப்பதாஸ், ஜல்லிக்கட்டு, சின்னத்தம்பி பெரியதம்பி என தொடர் வெற்றியை இவருக்கு கொடுத்தன. 90களின் துவக்கத்திலிருந்து மற்றொரு கோயம்பத்தூரை சேர்ந்த நடிகர் கவுண்டமணியுடன் இவர் காமெடி கூட்டணி அமைத்தார்.

இருவரது கூட்டணியும் மிக சிறப்பாக ரசிகர்களால் கொண்டப்பட்டது. படங்களும் நல்ல வெற்றியை பெற்றன. 2000ஆம் ஆரம்பத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக இவருடைய படங்கள் சறுக்க துவங்கின. இவர் நாயகனாக நடித்த படங்கள் தோல்வியை சந்திக்க துவங்கின. இதனால் கொஞ்ச சுதாரித்து கொண்ட சத்யராஜ், துணை கதாபாத்திரங்களில் நடிக்க தெலுங்கு படங்களில் துவங்கினர். பின்னர் மெல்ல சில தமிழ் படங்களிலும் நடிக்க துவங்கினர். விஜயுடன் நண்பன், தலைவா, விஷாலுடன் பூஜை என தமிழிலும் நடித்து வந்தார்.

அதில் கிடைத்த வாய்ப்பு தான் பாகுபலி படங்கள், 2 படங்களும் இந்திய அளவில் மிக பெரிய வசூல் செய்த படங்கள். அந்த படங்களை தொடர்ந்து இன்னும் சிறப்பான துணை கதாபாத்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் வெளியாகவுள்ள வீட்ல விசேஷம் படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்து வருகிறார். கலாட்டாவான காமெடி திரைப்படமாக இப்படம் உருவாகி இருக்கிறது. திருமண வயதில் இருமகன் இருக்கும் போது, ஊர்வசி கர்ப்பமாக இருக்கிறார். தந்தையாக சத்யராஜ் நடித்துள்ளார்.

ஹிந்தியில் வெளியான “பதாய் ஹோ” என்ற வெற்றி படத்தின் ரீமேகாக உருவாகும் இந்த படம் வருகிற ஜூன் 17ஆம் தேதி வெளியாக உள்ளன. இந்த படத்திற்காக தீவிரமாக ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழு இறங்கியுள்ளன. அதன் ஒரு அங்கமாக பிரபல சீரியல் ஒன்றில் படக்குழு ப்ரோமோஷனுக்காக இடம்பெற உள்ளன.

90களின் பிரபல நடிகை தேவயானி நடிப்பில் ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் “புது புது அர்த்தங்கள்”. இந்த தொடரில் தான் படக்குழு விரைவில் கலந்து கொள்ள உள்ளன. அண்மையில் இதற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவின் மூலம் வெள்ளித்திரையில் ஹீரோ, வில்லன், துணை கதாபாத்திரம் என பல வகையிலும் கலக்கி வரும் சத்யராஜ் இப்பொது சின்னத்திரை தொடரிலும் நடிக்க உள்ளார்.
