அமெரிக்க-இந்தியா இடையிலான ஒப்பந்தம் 18 பில்லியன் டாலராக உயரும்!

டி.டி.டி.ஐ எனப்படும் இந்தியா-அமெரிக்க இடையிலான பாதுகாப்பு வர்த்தக ஒப்பந்தம் இந்தாண்டு இறுதிக்குள் 18 பில்லியன் டாலராக உயருமென பெண்டகன் தெரிவித்துள்ளது.

புது டெல்லியில் நடைபெற இருக்கும் இந்தியா-அமெரிக்க இடையிலான ஒன்பதாவது பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் மற்றும் வர்த்தக கூட்டத்தில் இது குறித்து முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பரம்

இந்தியாவுடனான தனது கூட்டாட்சியை நட்புறவை வலுப்படுத்த அமெரிக்கா உறுதிபூண்டுள்ளதாக பாதுகாப்பு துணை செயலாளர் எலன் எம் லார்ட் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், பாதுகாப்பு வர்த்தகம் கடந்த 2008ஆம் ஆண்டு பூஜ்ஜியமாக இருந்தது, ஆனால் அது இந்த ஆண்டு 18 பில்லியன் டாலராக உயரும். இந்தியாவிற்கு பாதுகாப்பு சாதனங்களை அதிக அளவில் விற்பனை செய்வதன் மூலம் அமெரிக்க நிறுவனங்கள் அதிக இலாபத்தை ஈட்டும். இவ்வாறான அமெரிக்க-இந்தியா இடையிலான பாதுகாப்பு மேம்பாடு மாறும் ஒத்துழைப்புகள் மற்ற இந்தோ-பசிபிக் நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்குமென அவர் தெரிவித்தார்.

விளம்பரம்
அமெரிக்க-இந்தியா இடையிலான ஒப்பந்தம் 18 பில்லியன் டாலராக உயரும்! 1

அடுத்த வாரம், பென்டகன் இணை பாதுகாப்புத் தலைவர் புதுடெல்லி வருகிறார். அப்போது, அவர் இந்திய பாதுகாப்பு இணை செயலாளர் அபர்வ சந்திராவவை சந்தித்து பேச இருக்கிறார்.

தொடர்புடையவை  பெண் குழந்தைகள் திட்டம் பெரும் வளர்ச்சி!

கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பாதுகாப்பு குழு கூட்டத்தில் பாதுகாப்பு வர்த்தகம், தொழில்நுட்பம், கொள்முதல், தொழில், ஆர் அன்ட் டி மற்றும் மில்-டு-மில் ஈடுபாடு ஆகியவற்றில் இந்தியாவுடன் அமெரிக்க தொடர்ந்து ஒத்துழைப்பை மேம்படுத்தும் என முடிவெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment