10 ஆண்டுகளாக காதல்..இந்த காரணத்தால்தான் திருமணம் செய்யவில்லை.. திருமணம் குறித்து முதல் முறையாக மனம் திறந்த பிரியா பவானி ஷங்கர்

தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் செய்தி வாசிப்பாளராக இருந்து தமிழ் வெள்ளித்திரையில் ஜொலித்துக் கொண்டிருப்பவர்தான் பிரியா பவானிசங்கர். இவர் வெள்ளத்திரைக்கு வருவதற்கு முன்பாக விஜய் டிவியில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் நடித்தார். யதார்த்தமான தடிப்பை வெளிப்படுத்திய பிரியா பவானிசங்கருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர் தனது திருமணம் குறித்து கொடுத்த பேட்டி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 10 ஆண்டுகளாக ஒருவரை காதலித்து வரும் நிலையில் அவருடன் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று பிரியா கூறியுள்ள காரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

10 ஆண்டுகளாக காதல்..இந்த காரணத்தால்தான் திருமணம் செய்யவில்லை.. திருமணம் குறித்து முதல் முறையாக மனம் திறந்த பிரியா பவானி ஷங்கர் 1

விளம்பரம்

தமிழில் மேயாத மான் என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்தார். பின்னர் கடைக்குட்டி சிங்கம் என்ற படத்தில் நடித்தார். பிறகு எஸ்.ஜே சூர்யாவுடன் இணைந்து மான்ஸ்டர் படத்தில் நடித்தார். இந்த படம் இவருக்கு பெரிய ஹிட் கொடுத்தது. மீண்டும் எஸ்.ஜே சூர்யாவுடன் இணைந்து பொம்மை படத்திலும் நடித்து முடித்துள்ளார். தற்போது அருண் விஜயுடன் இணைந்து யானை படத்திலும், ஜெயம் ரவியுடன் இணைந்து அகிலன் படத்தில் போலீஸ் அதிகாரியாகவும் நடித்துள்ளார். மேலும் கைவசம் ருத்ரன், பத்து தல, தனுஷின் திருச்சிற்றம்பலம் போன்ற படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

தொடர்புடையவை  முதல்வர் முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய சிவகார்த்திகேயன் மகள்.. செஸ் நிறைவு விழாவில் ஆச்சரிய நிகழ்வு

10 ஆண்டுகளாக காதல்..இந்த காரணத்தால்தான் திருமணம் செய்யவில்லை.. திருமணம் குறித்து முதல் முறையாக மனம் திறந்த பிரியா பவானி ஷங்கர் 3

விளம்பரம்

பிரியா பவானி ஷங்கர் கடந்த 10 ஆண்டுகளாக ராஜவேலு என்ற தனது கல்லூரி நண்பரை காதலித்து வந்தார். ஆனால் 10 ஆண்டுகள் ஆன பின்பும் காதலனை திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதற்கான காரணங்களை கூறியுள்ளார். கல்லூரி படிப்பு முடிந்தவுடனேயே திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருந்ததாகவும், ஆனால் சினிமாவில் நடித்த காரணத்தால் திருமணம் தள்ளிப் போய்விட்டது என்று கூறியுள்ளார். தன்னுடைய பொருளாதார தேவைக்காக ஒரு வேலை பார்த்து வருகிறேன் இந்த வேலைதான் செய்ய வேண்டும் என்று லட்சியம் எதுவும் இல்லை என்றும் அவர் கூறினார்.

விளம்பரம்

Leave a Comment