திருச்சிற்றம்பலம் படம் வெளியாகும் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்தது படக்குழு..எப்போன்னு தெரியுமா?

நடிகர் தனுஷ் நடிக்கும் திருச்சிற்றம்பலம் படத்தின் வெளியாகும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழின் முண்ணனி நடிகர்களில் ஒருவரான தனுஷ், சிறு வயதிலேயே திரைப்படத்துறையில் தனது பயணத்தைத் தொடங்கி தற்போது வெற்றி நாயகனாக வலம் வருகிறார். ஆரம்பத்தில் உருவக்கேலியால் பல அவமானங்களை சந்தித்த போதிலும் தற்போது பாலிவுட், ஹாலிவுட், கோலிவுட் என அனைத்து தளங்களிலும் முத்திரை பதித்து வருகிறார். நடிப்பது மட்டுமில்லாமல் பாடுவது, பாடல் எழுதுவது, நடனம், படத்தயாரிப்பு என அனைத்திலும் சாதனை படைத்து வருகிறார் தனுஷ். இவர் படங்களை தயாரிப்பதற்காக கடந்த 2010ம் ஆண்டு வொண்டர்பார் ஃபிலிம்ஸ் என்னும் நிறுவனத்தை தொடங்கினார்.

திருச்சிற்றம்பலம் படம் வெளியாகும் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்தது படக்குழு..எப்போன்னு தெரியுமா? 1

விளம்பரம்

தனுஷ் நடிப்பில் இறுதியாக ஓடிடி தளத்தில் வெளிவந்த படம் மாறன். இந்த படம் பெரிய அளவில் தோல்வி அடைந்தது. தனுஷ் ஹாலிவுட்டில் நடித்துள்ள கிரே மேன் படம் ஓடிடி தளமான நெட்ஃபிளக்ஸ் ஜூலை 15ம. தேதி ரிலீஸ் ஆகிறது. தற்போது யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்துள்ளார். படத்தின் இறுதிகட்ட பணிகள் முடிவடைந்துள்ளது. படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்கள் குறித்து ஒவ்வொரு வீடியோவாக வெளிவந்து கொண்டிருந்தது. தற்போது படம் வெளியாகும் தேதியை அறிவித்துள்ளது படக்குழு.

தொடர்புடையவை  "ஸ"வை நீக்கி முதல்வர் ஸ்டாலினை எப்படி அழைக்க வேண்டும் - அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் பா.ஜ.க வின் மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி.

திருச்சிற்றம்பலம் படம் வெளியாகும் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்தது படக்குழு..எப்போன்னு தெரியுமா? 3

விளம்பரம்

ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் படம் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவித்து இருந்த நிலையில் ஆகஸ்ட் 18ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், பிரியா பவானி ஷங்கர், நித்யா மேனன் போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தனுஷ் படத்தற்கு அனிருத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பை தனுஷ் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment