நடிகை நயன்தாரா 37 வயதில் திருமணம் செய்து கொண்டதை கிண்டலடித்து மருத்துவர் ஒருவர் போட்ட பதிவு சர்ச்சையை கிளப்பிய நிலையில் இன்று அவர் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். தமிழின் முண்ணனி நடிகையாக இருந்த நயன்தாரா கடந்த வாரம் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். சென்னையில் திரையுலகினர் பலர் முன்னிலையில் ரிசார்ட்டில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்த கையோடு சாமி தரிசனம் செய்த அவர்கள், தற்போது நயன்தாராவின் சொந்த ஊரான கேரளாவுக்கு சென்றுள்ளனர். நயன்தாராவின் அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரால் திருமணத்திற்கு வரமுடியவில்லை. இதனால் இருவரும் இரண்டு நாட்களுக்கு முன்பு கொச்சிக்கு சென்றுள்ளனர்.

இந்த நிலையில் ட்விட்டரில் மருத்துவர் ஒருவர் போட்ட பதிவு நேற்று மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. ஏற்கனவே நயன்தாராவிற்கு 37 வயது, விக்னேஷுக்கு 36 வயது என்று மீம்ஸ் போட்டு கலாய்த்து வந்தனர் நெட்டிசன்கள். இதை மேற்கோள் காட்டி மருத்துவர் ஒருவர், 40 வயதான உங்களுக்கு திருமணமும் குழந்தைகள் கனவும் தேவைதானா? செயற்கை முறை கருத்தரிப்பு தான் இவருக்கு குழந்தை பெற உதவ வேண்டும் என பதிவிட்டு இருந்தார். இதற்கு பல தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்தன. பிண்ணனி பாடகி சின்மயி கூட மருத்துவர் ஒருவர் குப்பை பதிவை பகிர்கிறார் என்று கண்டனம் தெரிவித்து இருந்தார்.

தற்போது மீண்டும் அந்த மருத்துவர் தான் போட்ட பதிவிற்கு மன்னிப்பு கேட்டு ஒரு பதிவை போட்டுள்ளார். முதலில் என்னை மன்னித்துவிடுங்கள், நான் அவ்வாறு சொன்னதற்கு ஒரு காரணம் இருக்கிறது என்று பின்வருமாறு விளக்கத்தை அளித்துள்ளார். அன்புள்ள அனைவருக்கும், எனது சக மருத்துவர் தோழி உடனான சின்ன அரட்டை மற்றும் சாதாரண கருத்து உங்கள் மனதை புண்படுத்தியிருந்தால் முதலில் அனைவருக்கும் எனது மன்னிப்பை அனுப்புகிறேன். 30 வயதிற்குப் பிறகு பெண்களின் முட்டை அல்லது கருமுட்டை உயிரியல் பலவீனமடைகிறது என்பதே அந்தக் கருத்துக்குப் பின்னால் உள்ள காரணம். ஜோதிகா தனது குடும்பத்தையும் குழந்தைகளையும் வளர்ப்பதற்காக 5 ஆண்டுகள் புத்திசாலித்தனமாக ஓய்வு எடுத்த ஜோதிகாவின் புத்திசாலித்தனமான முடிவை நாங்கள் டாக்டர் நண்பர்கள் அரட்டை அடித்து பாராட்டினோம்.

நானும் நயன்தாரா ரசிகன் தான், அதனால் தான் தாமதமான திருமணம் மற்றும் குழந்தைகளின் முடிவைப் பற்றி நான் மிகவும் கவலைப்பட்டேன். மீண்டும் ஒருமுறை நயன்தாரா ரசிகர் மன்றத்திடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். சாதாரண கருத்துக்காக, சின்மயி போன்றவர்கள் ஒரு கருத்தை மட்டும் எடுத்து யாரையும் அனுமானிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். என்னை வில்லன் போல் சித்தரிக்கப்பட்ட்டுள்ளது..ஆனால் நான் அவ்வாறு இல்லை என்று கூறியுள்ளார்.

This is in response to that irresponsible doctor who made some loose comments on the age of an actress whose marriage took place a week or so. Many successful ladies have married after their prime. Eg, Aishwarya Rai, Katrina. They know what they are getting into. This doctor need not worry . He is a villain in guise of a doctor. I condemn his irresponsible statement. As a doctor he should have maintained some decorum. His advise should be confined to his consultation room. Not beyond that. Stupid fellow.
I strongly condemned that doctor’s statement. Irresponsible and uncalled for.
Sonalum solaenalum ava oru paatithaan unmaiyae thaanae solirukinga ,, vidunga boss ,,,aval kadakura
Don’t do this again
60 vayasula kozhanda pethavanga irukangada mairu
Ya ofcourse
Who is given rights to discuss about her personal family life??? She is strong lady and after so many of struggles she’s archived being lady super Star. Please don’t talk rubbish about her.
As a girl I proud of her.
Don’t talk rubbish😡😡😡, she is very bold,intelligence and she struggled to won this title “LADY SUPER STAR”💯💯