சன் மியூசிக் தொலைக்காட்சியில் அங்கராக தன்னுடைய மீடியா வாழ்க்கையை துவங்கியவர் வி.ஜே.மணிமேகலை. சன் மியூசிக்கில் இருந்த போதே புகழ் பெற்ற தொகுப்பாளராக இருந்தார் இவர், விஜய் டிவியில் சில வாய்ப்புகள் கிடைக்க, அங்கிருந்த இங்கு வந்தார். அதுவே அவருடைய வாழ்க்கையின் மிக பெரிய வெற்றிக்கு வழி வகுத்தது. விஜய் டிவியின் இப்போதைய முன்னணி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சி இந்த அளவிற்கு மக்களிடம் வரவேற்பை பெற இவரும் ஒரு முக்கிய பங்கு ஆற்றியுள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விஜய் டிவிக்கு வந்த புதிதில் சில நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவே இருந்த இவரை கோமாளியாக முதல் சீசனிலேயே களம் இறக்கியது அதன் தயாரிப்பு குழுமம். பாலா, புகழ் என ஆண்கள் எவ்வாறு இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு முக்கிய காரணமோ அதே போல தான் பெண் கோமாளிகையாக ஐவரும் மக்களுக்கு மிகவும் பிடித்தமான நபராக அந்த நிகழ்சியில் இடம் பெற்றுள்ளார்.

இவருடைய கணவர் ஹுசைன். சினிமாவில் துணை நடன அமைப்பாளராக இருக்கும் இவரை 2017ஆம் ஆண்டு காதலித்து பெற்றோர்கள் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டார். சிறப்பான தொகுப்பாளர் மட்டுமின்றி இவர் தனியாக யூடுபியில் சேனல் ஒன்றும் நடத்தி வருகிறார். தனது கணவருடன் சேர்ந்து பல விடியோக்களை அந்த தளத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு செலிபிரிட்டியாக அண்மைக்காலங்களில் உருவெடுத்துள்ளார்.

இவர்களின் திருமணம் பல தடைகளை மீறி நடந்த நிலையில் எப்படியாவது வாழ்க்கையில் முன்னேறி அனைவருக்கும் காட்ட வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்து வருகிறார்கள். மேலும் இவர்களை திருமணத்தைப் பற்றி பல தகவல்கள் வெளிவந்த நிலையில் தற்போது வரையிலும் இவர்களை பெற்றோர்கள் சேர்த்துக் கொள்ளவில்லை.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “பாரதி கண்ணம்மா” தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தும், தனக்கு தொகுப்பாளராக இருக்கவே விருப்பம் என்பதால் அந்த வாய்ப்பு மறுத்துவிட்டார். இவர் கிட்டத்தட்ட இவர் 12 வருடங்களாக சின்னத்திரையில் பணியாற்றி வருகிறார். மிகவும் சின்னத்திரையில் பிரபலம் அடைந்து வரும் இவர் அண்மைக்காலங்களில் தனது கணவர் உசைனுடன் இணைந்து விலை உயர்ந்த கார்,பைக் ஆகியவற்றை தனது சொந்த உழைப்பால் வாங்கினார்கள்.

அண்மையில் பிறந்தநாளை கொண்டாடிய மணிமேகலைக்கு பிறந்தநாளன்று உசைன் பரிசாக ஒரு நிலத்தை வாங்கி தந்தார். அதுவும் மணிமேகலையின் நீண்ட நாள் கணவனை சொந்த ஊரிலேயே அந்த நிலத்தை வாங்கி அவருக்கு பரிசளித்துள்ளார் உசைன். தன்னுடைய சொந்த ஊரில் எப்படியேனும் ஒரு வீட்டை கட்டிவிட வேண்டும் என்பதே மணிமேகலைக்கு அவருடைய வாழ்வின் மிக முக்கிய குறிகோளாக இருந்துள்ளது. இப்பொது அதற்கான முதற்க்கட்ட பணிகளை துவங்கியுள்ளனர்.

இது குறித்த வீடியோவை மணிமேகலை யூடியூப் சேனலில் பகிர்ந்துள்ளார். நிலத்திற்கு போர் அடித்து முடித்த உடன் வீடு கட்டுவதற்கான பணிகளை ஆரம்பிப்பார்கள் என்று கூறப்படுகிறது. தனது சொந்த முயற்சியால் வளர்ந்து வரும் மணிமேகலைக்கு ரசிகர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
Video Courtesy -HussainManimeghalai.