“நேரடியாகவே இளையராஜா என்னை ஒதிக்கிட்டார்”!! மேடையிலேயே கண் கலங்கிய இயக்குனர் சீனு ராமசாமி!!

ஆக்ஷன், சண்டை, காதல் என்பதை மட்டுமே வைத்து சுழன்று கொண்டிருக்கும் திரையுலகில் எப்போதும் சில வித்தியாசமான இயக்குனர்களும் இருப்பது வழக்கமே. மற்ற பெரிய இயக்குனர்களை போல இவர்களை மக்கள் கொண்டாட தவறினாலும், இவர்களுடைய படங்களை மக்கள் கை விடுவதில்லை. அந்த வகையில் தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான இயக்குனராக இருப்பவர் மதுரையை சேர்ந்த சீனு ராமசாமி. இவர். இவர் கூடல்நகர் என்ற படத்தை இயக்கியதன் மூலம் தான் என்ற உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் தென்மேற்கு பருவக்காற்று, நீர்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே என பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி இருக்கிறார்.

"நேரடியாகவே இளையராஜா என்னை ஒதிக்கிட்டார்"!! மேடையிலேயே கண் கலங்கிய இயக்குனர் சீனு ராமசாமி!! 1

விளம்பரம்

இவர் இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று அப்படத்தின் மூலம் தான் விஜய் சேதுபதி நாயகனாக அறிமுகமானார். தென்மேற்கு பருவக்காற்று படத்திற்கு 3 தேசிய விருதுகளை சீனு ராமசாமி வென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 2010ஆம் ஆண்டு வெளியான இந்த் படம் சிறந்த தமிழ் படம் மற்றும் நடிகை சரண்யா பொன்வண்ணனுக்கு சிறந்த துணை நடிகை மற்றும் வைரமுத்து அவர்களுக்கு சிறந்து பாடலாசிரியர் பட்டியலில் தேசிய விருதுகள் கிடைத்தது.

தொடர்புடையவை  "ரெட் கார்டிலிருந்து கோல்டன் விசா வரை"!! பத்துதல என நிரூபிக்கும் சிம்பு"!!

"நேரடியாகவே இளையராஜா என்னை ஒதிக்கிட்டார்"!! மேடையிலேயே கண் கலங்கிய இயக்குனர் சீனு ராமசாமி!! 3

விளம்பரம்

அதன் பின் இவர் மீண்டும் விஜய் சேதுபதியுடன் தர்மதுரை, உதயநிதியுடன் கண்ணே கலைமானே என படங்களை இயக்கிய உள்ளார். இதில் குறிப்பாக விஜய் சேதுபதியின் தர்மதுரை மக்களிடமும், விமர்சனகர்களிடமும் மிக பெரிய வரவேற்பை பெற்று பெரிய வெற்றியை பெற்றது.

"நேரடியாகவே இளையராஜா என்னை ஒதிக்கிட்டார்"!! மேடையிலேயே கண் கலங்கிய இயக்குனர் சீனு ராமசாமி!! 5

விளம்பரம்

அதன் பின் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ராமசாமி இடம் பொருள் ஏவல் மற்றும் மீண்டும் விஜய் சேதுபதியுடன் மாமனிதன்.  இந்த இரு படங்களும் ரிலீசுக்கு தயார் நிலையில் இருக்கிறது. அந்த வகையில் தற்போது வெளியாக இருக்கும் படம் மாமனிதன். இந்த படத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி,ஆர்.கே. சுரேஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். நீண்ட நாட்களாக ரிலீசாகாமல் இந்த படம் இருக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில், அவரே இளையராஜாவுடன் இணைந்து இசை அமைத்திருக்கிறார். படம் வருகிற ஜூன் 24ஆம் தேதி 3 மொழிகளில் தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாக உள்ளன. நடிகர் ஆர்.கே. சுரேஷ் படத்தை தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியிடுகிறார்.

தொடர்புடையவை  500வது எபிசோட் தொட்ட சிறகடிக்க ஆசை சீரியல்..! கேக் வெட்டி கொண்டாடிய நடிகர்கள்..!

"நேரடியாகவே இளையராஜா என்னை ஒதிக்கிட்டார்"!! மேடையிலேயே கண் கலங்கிய இயக்குனர் சீனு ராமசாமி!! 7

விளம்பரம்

இந்த படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது. அப்போது இயக்குனர் சீனு ராமசாமி பேசியபோது, “நான் இளையராஜா மீது மிகப்பெரிய பற்று கொண்டவன். அதனால் தான் படத்தின் முதல் ஷாட் எடுக்க கேமராவை இளையராஜாவும், முதல் சகோதரர்களும் வாழ்ந்த தெருவில் வைத்தேன். படத்திற்கு முதலில் இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா ஆகியோர் இணைந்து இசையமைப்பதாக இருந்தது. ஆனால் என்ன நினைத்தாரோ தெரியவில்லை கார்த்திக் ராஜா விலகிக்கொண்டார். இந்த சமயத்தில் படத்தை பார்த்த இளையராஜா என்னை கூப்பிடாமலேயே ரீ ரெக்கார்டிங்கை முடித்துவிட்டார்.

"நேரடியாகவே இளையராஜா என்னை ஒதிக்கிட்டார்"!! மேடையிலேயே கண் கலங்கிய இயக்குனர் சீனு ராமசாமி!! 9

விளம்பரம்

இது எந்தவிதத்தில் நியாயம்? அதுமட்டுமில்லாமல் அவர்களிடம் போகும் போது அவர்களுக்கு சரியாக இருக்கும் கவிஞர்கள் வைத்துதான் பாடல் எழுதுவார்கள் என்று சிலர் கூறி இருந்தார்கள். நானும் என்று ஒத்துக் கொண்டேன். ஆனால், பாடல் வரிகள் கூட எனக்கு தெரியவில்லை. ஒரு முறை யுவன் சங்கர் ராஜாவின் பிறந்த நாள் விழாவுக்கு சென்றிருந்த போது கருணாகரன் என்பவர் என்னிடம் வந்து வணக்கம் நான் பாடலாசிரியர் கருணாகரன். மாமனிதன் படத்துக்கு பாடல் எழுதி இருக்கிறேன் என்று கூறியிருந்தார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

தொடர்புடையவை  நிறைமாதத்தில் Youtuber Erumasani Vijay மனைவி..! கலக்கலாக போட்டோஷூட் எடுத்த Vijay..!

"நேரடியாகவே இளையராஜா என்னை ஒதிக்கிட்டார்"!! மேடையிலேயே கண் கலங்கிய இயக்குனர் சீனு ராமசாமி!! 11

விளம்பரம்

ரீ ரெக்கார்டிங்கிற்கு என்னை அழைக்காதது குறித்து யுவன் அலுவலகத்தில் வேலை செய்யும் ஒருவர், வைரமுத்து பெயரை போட நீங்கள், கார்த்திக் ராஜா பெயரை போடாததால் அவரது தந்தை இளையராஜா படத்தின் ப்ரோமோஷன்களில் பங்கேற்க மாட்டார் என்று சொன்னார். எனக்கு அது அதிர்ச்சி அளித்தது. வைரமுத்து எனது படங்களில் தொடர்ந்து பாடல் எழுதியவர். அவருடன் வேலை செய்தது பிடிக்கவில்லை என்றால், யுவனும் தானே வைரமுத்துவுடன் வேலை செய்திருக்கிறார். அவருடன் மட்டும் சேர்ந்துகொண்டு என்னை ஏன் ஒதுக்குகிறார்? என்று கூறி இருந்தார். அவ்வாறு பேசிக்கொண்டிருக்கும் போதே அவர் மேடையிலேயே மனம் வருந்தி சில நொடிகள் கண் கலங்கினார்.

விளம்பரம்

Video Courtesy – FullOnCinema

விளம்பரம்

Leave a Comment