இந்தியாவில் குறிப்பாக நம்முடைய தென்மாநிலங்களான தமிழகத்திலும், இரண்டு ஆந்திர மாநிலங்களிலும் அரசியலும், சினிமாவும் பிரிக்க முடியாதவை. சினிமாவிலிருந்து நாட்டை ஆண்ட எம்.ஜி.ஆர், என்.டி.ஆர், ஜெயலலிதா போன்றவர்கள் தாங்கள் நடிக்கும் படங்களில் அரசியல் பேசுவதையோ, குறியீடுகள் வைப்பதற்கோ ஒருபோதும் யோசித்தது இல்லை. அதே பாணியில் இப்போதுள்ள ரஜினி கூட 25ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் பேசிவந்தார். ஆனால் இப்பொது உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அவரால் முழுநேர அரசியலில் எடுபட முடியவில்லை.இப்போதிருக்கும் இளைய தலைமுறையினருக்கு முக்கிய பிடித்தமான நாயகனாகவும், போது வெளியில் வெளிப்படையாக அரசியலை பற்றி மக்களிடம் பேசி வருபவரும் நடிகர் தளபதி விஜய். ஒவ்வொரு படம் அரசியல் பற்றியோ சமூகம் பற்றியோ பேசினால் பிரச்சனை ஆகும் வெளிவரும் போது, ஆனால் இவருடைய படங்கள் வந்தாலே எதோ ஒரு பிரச்சனை தான். ஆனால் அதனையெல்லாம் தாண்டி, இவருடைய படங்கள் தொடர்ந்து மிக பெரிய வசூலை குவித்து வருகிறது.

நீண்ட காலமாகவே அரசியல் பேசிவரும் நடிகர் விஜய் மக்கள் இயக்கம் என ஒரு இயக்கத்தை உருவாக்கி இருந்தார். 2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த இயக்கம், இப்பொது தீவிர அரசியலில் ஈடுபட துவங்கி உள்ளது. முன்னர் சட்டமன்ற தேர்தலில் மற்ற கட்சிகளுக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்து வந்த விஜய், நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் தன்னுடைய மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட வேட்பாளர்களுக்கு நேரடியாக தன்னுடைய ஆதரவை தெவித்தார். மக்கள் சார்பாக போட்டியிட்டவர்கள் 51 பேர் வெற்றி பெற்றுள்ளனர், அவர்களை நேரில் சந்தித்தும் நடிகர் விஜய் வாழ்த்து கூறினார்.

இவர் பாடங்களில் சின்னத்தாக பேசப்படும் சில அரசியல் காட்சிகளும் வெளியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும். குறிப்பாக 2017ஆம் ஆண்டு வெளியான “மெர்சல்” படத்தில் அனைவரும் விமர்சிக்க தயங்கிய GST குறித்து தைரியமாக பேசினார் விஜய். அதுமட்டுமின்றி கோவில் கட்ட முற்பட்டு, அப்போது ஏற்படும் விபத்தால் உண்மை நிலவரத்தை புரிந்து கொண்டு “நமக்கு கோவில் தேவையில்லை, இங்கு ஹாஸ்பிடல் வேண்டும்” என கூறுவார்.

அப்போது இந்த இரண்டு விஷயங்களும் பயங்கரமாக விமர்சிக்கப்பட்டன. குறிப்பாக மத்தியில் ஆளும் பா.ஜ.காவை சேர்ந்த தமிழகத்தை சேர்ந்த நிர்வாகிகள் வெளிப்படையாக படத்தை விமர்சித்தனர். அனைவரையும் மிஞ்சி திரு.ஹெச்.ராஜா அவர்கள் விஜயை “ஜோசப் விஜய்” என பல இடங்களில் பதிவிட்டார்.
அது வரை விஜய்யின் அரசியல் நுழைவு குறித்து சந்தேகித்து வந்த பலரும், நிச்சயம் விஜய் தீவிர அரசியலில் ஈடுபடுவார், அதன் முன்னோட்டமாகவே இது போன்ற எதிர்ப்புகள் அவருக்கு வர துவங்கியுள்ளன என கூறினார்கள். இன்று தன்னுடைய 48வது பிறந்தநாளை கொண்டாடும் விஜய்க்கு அவருடைய ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களும், போஸ்டர்களும் தமிழகம் எங்கும் அடித்துள்ளனர். அதில் மிகவும், கவர்ந்தவை மதுரை தெற்கு ஏரியாவை சேர்ந்தவர்கள் வைத்துள்ள போஸ்ட்டரே.

ஏனெனில் அந்த போஸ்டரில் விஜயுடன் மறைந்த முன்னாள் முதல்வர் திரு.கருணாநிதி அவர்களும் தற்போதைய முதல்வர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்களுடன் நடிகர் விஜய் நிற்பது போலவும், எழுத்தில் வருங்கால முதல்வரே எனவும் எழுதப்பட்டு இந்த போஸ்டராக்கள் வைக்கப்பட்டுள்ளன. இதை அவர்கள் எந்த எண்னத்தில் வெய்துள்ளார்கள் என்பது நமக்கு புரிகிறது என்றாலும், ஏன் அவ்வாறு செய்யவேண்டும் என்பதே புரியாத புதிராக உள்ளது.