
பாகுபலி படத்தில் ஜோடியாக இணைந்த நடித்த பிரபாஸ் மற்றும் அனுஷ்கா பற்றி பல நாட்களாக காதல் கிசுகிசு உலா வந்துகொண்டிருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். முதலில் அதுபற்றி இருவரும் கண்டுகொள்ளாமல் தான் இருந்தனர். கிசுகிசு அதிகரிக்கத் தொடங்கியதும் வேறுவழியில்லாமல், ‘நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள்’ என்று பதில் அளித்தனர். குடும்பத்தின் எதிர்ப்பு காரணமாக இருவரும் காதலை வெளிப்படுத்த தயங்குகின்றனர் என்று தகவல்கள் வெளியாகின. இதற்கிடையில் இருவரது வீட்டிலும் தனித்தனியாக வரன் பார்க்க தொடங்கினர்.
இந்த நிலையில் பிரபாஸ் மற்றும் அனுஷ்கா ஆகிய இருவரும் லண்டன் சுற்று பயணம் போல சென்றிருக்கின்றனர். அங்கு இருவரும் ஜோடிபோட்டு பிரபலமான இடங்களை சுற்றிப்பார்த்தனர். இவர்களுடன் ராஜமவுலி. நடிகர் ராணாவும் சென்றிருக்கிறார்கள். லண்டனில் ராயல் ஆல்பர் ஹாலில் பாகுபலி படம் திரையிடப்பட்டதால் அந்த நிகழ்வில் பங்கேற்க படகுழுவினர் அங்கு சென்றிருக்கின்றனர்.
நிகழ்ச்சி முடிந்த நிலையில் வரும் 23ம் தேதி வரை அனைவரும் லண்டனிலேயே தங்கியிருக்க முடிவு செய்திருக்கிறார்கள். அன்றைய தினம் பிரபாஸின் பிறந்த தினம். அங்கேயே பிறந்த தினத்தை கொண்டாட முடிவு செய்துள்ளார்கள். பிறந்தநாளன்று பிரபாஸ் தனது திருமண அறிவிப்பை வெளியிட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அனுஷ்காவும் பிறந்த நாளில் உடன் இருப்பதால் ரசிகர்களிடையே திருமணம் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.