
தீபாவளி பண்டிகை வரும் 27 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், தீபாவளிக்கு மறுநாள் வரும் 28 ஆம் தேதி (திங்கள் கிழமை) அன்று அரசு விடுமுறையாக அறிவித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இந்த
விடுமுறையை ஈடு செய்யும் விதமாக நவம்பர் 9 ஆம் தேதியை பணிநாளாக அறிவித்து அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களுக்கும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் இந்த விடுமுறை பொருந்தும். அக்டோபர் 26, 27, 28 ஆகிய மூன்று தினங்கள் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மற்றும் வெளியூர்வாசிகள் பலரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகம் மட்டுமன்றி இந்தியா முழுக்க வெகு விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் தீபாவளிப் பண்டிகையும் ஒன்று. இதற்காக ஆண்டுதோறுக் அரசு சிரத்தை எடுத்துக்கொண்டு போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தி தரும் என்பது குறிப்பிடத்தக்கது.